பக்கம் எண் :

உழறல  

412

       முத்தப் பருவம்

உழறல்-உயர்ந்த யோனிகளிலும் தாழ்ந்த யோனிகளிலும் மாறிப்பிறத்தல், தாகம்-காமவேட்கை, ஒருங்கு-ஒருசேர, இன்பு-பேரின்பம், இன்பம்-வீடு-கனக்குன்றயன்-பொன்மயமான குன்றுகள் நிறைந்த குன்றத்தூரர், அனக-குற்றம் அற்றவனே.

    விளக்கம் :  முத்தப் பருவம் என்பது குழந்தை பிறந்த பதினோராம் மாதத்தில் தாதியர் குழந்தையை நோக்கித் தமக்கு முத்தம் தருமாறு வேண்டும் பருவமாகும்.  “பத்தினோடொன்றில் முத்தம் கூறலும்” என்பது பிங்கலந்தை.  பிராமணர்கட்குப் பஞ்சாதி ஓதுதல் கடமையாதல் போல ஏனையோர்க்குப் பஞ்சபுராணம் ஓதல் கடமை ஆதலின் பஞ்சாதி எனப் பொதுப்படக் கூறினர்.  தேவாரம், திருவாசகம், திரு விசைப்பா, திருப் பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய இவற்றின் பாடல்களைப் பூசை முடிவில் ஓதுதலே பஞ்சபுராணம் கூறல் ஆகும்.

    அநுலோபர், பிரதிலோபர், சங்கரர் எனப்படும் மூவர்கள்.  இவர்கள் உயர்ந்த சாதி கலப்பாலும் தாழ்ந்த சாதி கலப்பாலும் தாழ்ந்த சாதி உயர்ந்த சாதி கலப்பாலும் இவ்வாறு பலவகை கலப்பாலும் பிறந்த மரபினர் ஆவார்.

    சுரர் என்னும் சொல் தேவர்கள் என்று பொருள்படும்.  அவர்களே தேசுரர் என்றபோது தேவலோக தேவர் என்றும், பூசுரர் என்றபோது மன்ணுலக தேவர் என்றும் குறிக்கப்பெறுவர்.  ஆகவே, அவர்கள் ஈண்டு மண்தேவர் எனப்பட்டனர்.  இக்கால நாகரிக வாழ்வில் ஈடுபடாமல், அக்கால வேத ஒழுக்கத்தில் ஈடுபட்டு, ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகை தொழிலினை மேற்கொண்டு விளங்கினமையின் அவர்கள் மண்தேவர் என்னும் சிறப்புக்கு உரியவராயினர்.  “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” என்பது தொல்காப்பியம் பூசார் ஆயினும் ஒழுக்கத்தில் இவர்கள் பெரிதும் விழிப்புடையராய் இருத்தல் வேண்டும் என்பதை வள்ளுவர், “மறப்பினும் ஒத்துக் கொளல் ஆகும், பார்ப்பான்