பக்கம் எண் :

New Page 1 417

 

        முத்தப் பருவம்

417

பொய்யடிமை இல்லாத புலவரைப் பற்றிப் பாடியுள்ள  பாடல்களைக்  கொண்டு  நன்கு தெள்ளத் தெளிய உணரலாம்.

    அப்பாடல்களில் மதுரைச் சங்கத்தைப் பற்றியோ, நக்கீரர், கபிலர், பரணர்களைப் பற்றியோ எந்தவிதமான குறிப்பும் காணப்படாமையினைக் காணவும்.  மேலும், தனி அடியார்கள் அறுபான்மும்மை அடியார்களா என்பதையும் நாம் ஆராய்தல்வேண்டும்.  இவ்வாராய்ச்சிக்குப் பெருந்துணை செய்வது சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையே ஆகும்.  திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் ஒவ்வோர் அடியார்களையும் சுட்டிக் சுட்டி, அன்னார்க்கும் அன்னார் அடியார்கட்கும் தாம் அடிமை அடிமை என்ற முறையில் அடியேன் அடியேன் என்று பாடிச் சென்றுள்ளார்.  அங்ஙனம் பாடிய அவர், தம் பெற்றோர்களாகிய சடையனார் இசைஞானியர்களின் பெயர்களைச் சுட்டியபோது, அவர்கட்கும் அடியேன் என்று கூறிற்றிலர்.  ஆனால், அன்னார் இருவர்கட்குத் தாம் திருமகனார் என்பதைத்தான் கூறியுள்ளனர்.  அதனால் சுந்தரர் தம்இரு முது குரவர்களைப் பெற்றோர்கள் என்று கருதியுள்ளாரே அல்லாமல், அடியார்கள் என்று கருதினார் இல்லை என்பது புலனாகின்ற தன்றோ?  ஆகவே, தனியடியார் அறுபான் மூவர் என்று தொகை கொடுத்து முடிவு கட்டுதல் ஆராய்ச்சி உலகிற்கு அரண் செய்யாது. ஆனால், சமய உலகிற்கு அரண் செய்யும் என்பதை ஈண்டு நினைவுபடுத்துகின்றேன்.

    பொய்யடிமை இல்லாத புலவரைப்பற்றி மேலும் தெள்ளத் தெளிய அறிய அவாவுவார், அடியேன் எழுதியுள்ள பொய்யடிமை இல்லாத புலவர் யார்? என்னும் ஆய்வு நூலில் காண்பாராக.

    குன்றத்தூர் வெண்சுதை தீட்டப்பெற்ற வெள்ளிய கட்டடங்களின் மாடமாளிகைகள் கூடகோபுரங்களை உடையது.  ஆகவே, அது கைலைக்கிரி ஆயிற்று.  இவற்றின் மீது சூரியனது ஒளிக்கதிர்கள் படும்போது, அவை பொன்னிறமாக ஒளிவிடும்.  இதனை யாப்பருங் கலக் காரிகைப் பாடல் கொண்டும் நிறுவலாம்.