பக்கம் எண் :

New Page 1

 

        முத்தப் பருவம்

419

    [ அ. சொ. ]  பொலி-விளங்கும், குழாத்து-கூட்டத்தில் எய்தி-அடைந்து, ஆய்தரும்-ஆராயும், நயம்-அன்பு, சொல் நயம், பொருள் நயம் அணிநயம் என்றாலும் ஆகும்.  பொலிபு-விளங்கி, வரைக்கண்-மலையில், இவர்ந்து-ஏறி, மாதேவன்- மகாதேவனாம் இறைவன், வடிகாதகம்-அழகிய காதில், வளத்தரு-வளமான கற்பக விருட்சம், விண்ணில்-தேவலோகத்தில், பொலிவார்கள்-விளங்குபவர்கள், என்பு அழத்திற்கு- எலும்பாகக் கிடந்த பிணத்திற்கு, அழம்-பிணம், வெங்கரா கொடிய முதலை, விறலிற்றாய்-வன்மை மிக்கதாய், பொலி-விளங்கும்.

    விளக்கம் : இப்பாடலில் ஆசிரியர் திரு பிள்ளை அவர்கள் தமிழ்மொழியின் மாண்பைக் குறிப்பிட்டுச் செல்கின்றார்.  இறைவர் புலவர்களிடையே தாமும் ஒரு புலவராய் இருந்ததைத் திருவிளையாடற் புராணம்.

    கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து
    பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந் தமிழ்ஏனை
    மண்ணிடைச்சில இலக்கண வரம்பில மொழிபோல்
    எண்ணிடப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ

என்று வீறுகொண்டு விளம்புவாராயினார்.

    இதனை உட்கொண்டே ஈண்டுப்பிள்ளை அவர்கள் “புலவர் குழாத்து எய்தி ‘நும் மோடுயாம் ஒருவேம்’ என்று கூறி எம்பெருமான் இருந்தாய்” என்றனர்.

    இறைவர் புலவர்களோடு ஒருவராய் இருந்தது முதற் சங்கக் காலத்தில் ஆகும்.  இதனை இறையனார் அகப்பொருள் உரை கொண்டு நன்கு தெளியலாம்.  “தலைச்சங்கம் இருந்தார் அகத்தியனாரும், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும்,  குன்றெறிந்த முருகவேளும் முரிஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என இத் தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மர்” என்பது அவ்வுரை. புலவர்கள் “ஐஞ்ஞூற்று நாற்பத்தி ஒன்பதின்மர் ஆதலின், புலவர் குழாத்து” எனப்பட்டது.