எனப
எனப்பட்டனர். இவர்களது
வரலாற்றுக் குறிப்பை உற்று நோக்கினால் இவர்களது வன்மை நன்கு புலப்படுதல் காணலாம். அதனால்தான்,
“ விறல் எழுவர்” எனச் சிறப்பிக்கப்பட்டனர்.
சிவனடியார்களை
வாயார வாழ்த்தல் சைவர் மரபு. ஈண்டு வாழ்த்தல் துதித்தல். அடியார் திருவடிக் கமலங்களை
முடிமீது சூட்டலும் சைவ முறை யாகும். இதனைச் சேக்கிழாரே,
காழியர் தவமே கவுணியர்
தன்மே கலைஞானத்
தாழிய கடலே அதனிடை
அமுதே அடியார்முன்
வாழிய வந்திம் மண்மிசை
வானோர் தனிநாதன்
ஏழிசை மொழியான் தன்திரு
அருள்பெற் றனைஎன்பார்
என்றினைய பல கூறி “
இருக்கும் மொழி அந்தணரும் ஏனையோரும் நின்று துதி செய்து அவர்தாள் நீள் முடிக்கண் மேல் ஏந்தி”
என்று பாடிக் காட்டி இருத்தல் காண்க. அப்பூதி அடிகளார், அப்பர் பெருமான் திருவடிகளைத் தம்
முடிமேல் சூட்டிக் கொண்டதையும் சேக்கிழார்,
அரசறிய உரைசெய்ய
அப்பூதி அடிகள்தாம்
கரகமலம்
மிசைகுவியக் கண்அருவி பொழிந்திழிய
உரைகுழறி உடம்பெலாம்
உரோமபுள கம்பொலியத்
தரையின்மிசை
வீழ்ந்தவர்தம் சரணகம லம்பூண்டார்
என்பதை ஈண்டு நினைவு
கொள்வோமாக.
இவ்வெழுவர்
திருவடிகளைச் சேக்கிழார் துதித்துப் போற்றினமையினை “எரிபத்தர் அடிகள் சூடி,” என்றும் “ஏனாதிநாதர்
கழல் இறைஞ்சி” என்றும் தங்கணால் மாற்றப் பெற்ற தலைவர்தாள் தலைமேல் கொண்டு” என்றும்,
“கலயனாரைப் பணிந்து” என்றும், “ ஒரு மகள் கூந்தல் தன்னை வதுவைநாள் ஒருவர்க்கீந்த
பெருமையார் தம்மைப் போற்றும் பெருமை” என்றும், “வடுவின் ஓசை அந்நிலை கேட்ட தொண்டர் அடியினை
தொழுது வாழ்த்தி” என்றும் கூறியுள்ளமை கொண்டு அறியலாம்.
|