பக்கம் எண் :

சுந  

420

       முத்தப் பருவம்

    சுந்தரர்  மண்ணுலகு  தணந்து  கைலயங்கிரி  செல்லும் அவாவினராய்க்  கைலைக்குச் சென்றதை அவரே,

நிலைகெட விண்ணதிர நிலம்எங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானைஏறி வழியேவரு வேன்எதிரே
அலைகட லால்அரையன் அலர்கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண்ணம் நொடித்தான்மலை யுத்தமனே

என்றருளியுள்ளனர்.

    “மண்ணில் பொலிபு “என்று கூறியதனால் சுந்தரர் பூதவுடலுடன் இருந்தபோதே கைலாயத்திற்குச் செல்ல ஒருப்பட்டார் என்பது தெரிகிறது.  சுந்தரர் கைலைக்குச் செல்லும் போதும் நொடித்தான் மலை இறைவனது காது குளிரத் தேவாரம் ஓதினமையின், அப்பதிகம் தீந்தமிழ் ஆனமையின், “காதகம் உள்ளுருக்கு வளமை உடைத்தாய்” என்றனர்.  இதனைச் சுந்தரரே,

இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்தயானை அருள்புரிந்து
மந்திரம் மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான்
நந்தம்ஆ ரூரன்என்றான் நொடித்தான்மலை உத்தமனே

என்றருளினார்.

    இனிக் கயிலாயவரைக்கண் இவர்ந்து அம்மாதேவன் வடிகாத கம்புக்கு உள்ளுருக்கு வளமை உடைத்தாய் என்பதற்குக் காரைக்கால் அம்மையார் இறைவர்   காதகம்   குளிர, “அங்கணன் அம்மை யேஎன் றருள்செய அப்பா என்று,   பங்கயச்   செம்பொன்   பாதம் பணிந்துவீழ்ந் தெழுந்தார்” என்று எடுத்துக் காட்டினும் பொருந்தும்.  அல்லது, சேரமான் பெருமாள் நாயனார் திருக்கைலையில் தாம் இயற்றிய திருக்கயிலாய ஞான உலாவை இறைவர் செவி குளிரப் பாடி அருளினமை கருதி இவ்வாறு கூறப்பட்டது என்று விளக்கினும் அமையும்.  இதனைச் சேக்கிழார்,