பக்கம் எண் :

New Page 1

 

        முத்தப் பருவம்

421

    பெருகு வேதமும் முனிவரும் துதிப்பரும்
        பெருமையாய் உனைஅன்பால்
    திருஉ லாப்புறம் பாடினேன் திருச்செவி
        சாத்திடப் பெறவேண்டும்
    மருவு பாசத்தை அகன்றிட வன்தொண்டர்
        கூட்டம்வைத் தாய்என்ன
    அருளும் ஈசரும் சொல்லுக என்றனர்
        அன்பரும் கேட்பித்தார்

என்று விளக்கி உள்ளதைக் காண்க.

    திருஞானசம்பந்தர் திருமயிலைச் சிவநேசச் செட்டியார் திருமகளார் பூம்பாவை இறந்தபின் தம் மகளது எலும்பைச் சேமித்து வைத்துச் சிரபுரக் கோன் முன் வைக்க, திரு ஞானசம்பந்தப்பிள்ளையார் இறைவனை நோக்கி,

    மட்டிட்ட புன்னையம் கானல் மாடமயிலைக்
    கட்டிட்டம் கொண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
    ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
    கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

என்று பாடி எலும்பைப் பெண்ணாக்கினார்.

    இந்த அற்புதத்தைக் கண்ட விண்ணவரும் மண்ணவரும் வியந்து போற்றினர்.  இதனைச் சேக்கிழார்.

தேவரும் முனிவர் தாமும் திருவருள் சிறப்பு நோக்கிப்
பூவரு விரைகொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர்
யாவரும் இருந்த வண்ணம் எம்பிரான் கருணை என்றே
மேவிய கைகள் உச்சி மேற்குவித் திறைஞ்சி வீழ்ந்தார்

என்று பாடிக் காட்டினார்.

    இதனை உள்ளிட்டே “ஈண்டு விண்ணிற் பொலிவார்களும் வியப்ப” எனப்பட்டது.

    சுந்தரர் திருப்புக்கொளியூர் சென்றபோது, அங்கு ஓர் அந்தணக்குடும்பத்தார் தம் குமரன் முதலையால் விழுங்கப்பட்டு இறந்ததனால் வருந்த, அதை அறிந்த திருநாவலூரர் அவினாசி அப்பரை நோக்கி.