பக்கம் எண் :

தம

 

        முத்தப் பருவம்

423

    தமிழ் மொழி இன்னோரன்ன  வன்மை மிக்கது என்பதைப் பரஞ்சோதியாரும்,

    தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை
    உண்ட பாலனை அழைத்ததும் எலும்புபெண் ணுருவாக்
    கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித்
    தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்

என்று அறைகூவிப் பிறமொழியினரை அழைப்பாராயினார்.

    “இவ்வரிய நயம் குறித்தே பிள்ளையவர்கள் விறலிற்றாய்” என்றனர்.  பிள்ளையவர் சேக்கிழார் திருவாய் தமிழ்ப் பாக்களைப் பாடிப் பாடிப் பழகியதால், அது செந்தமிழ் மணக்கும் கனிவாய் ஆயிற்று, கனிவாய் என்றதனால் சேக்கிழாரின் உடல் நிறம், உறுப்பு, அழகு முதலியன புலனாகின்றன.  தமிழைப் பயின்றாலும் தமிழ்ப் பாடலைத் தொட்டாலும், எழுதினாலும் மணமே வீசப்பெறும் என்ற உண்மையினை,

        மாட்டாரும் தென்களந்தைப் படிக்காசன்
            உரைத்தமிழ் வரைந்த ஏட்டைப்
        பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகும்
            பரிமளிக்கும் பரிந்த ஏட்டைத்
        தொட்டாலும் கைம்மணக்கும் சொன்னாலும்
            வாய்மணக்கும் துய்யசேற்றில்
        நட்டாலும் தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே
            பாட்டினுடை நளினந் தானே

என்னும் தனிப் பாடலாலும் உணரலாம்.

    சேக்கிழார் புலவர் குழாத்துள் ஒருவராகச் சிறந்து விளங்குவதாலும், தெய்வப் புலவர் சேக்கிழார் என்று கூறப்படுதலாலும், ஆராயும் அறிவு பெற்றுள்ளமையாலும், இறைவன் உவக்கும் முறையில் பாடல்களைப் பாடி இருப்பதாலும், காரிட்ட ஆணவக் கருவறையில் கண்ணிலாக் குழவியைப்போல் கட்டுண்டிருந்த ஆன்மாக்களை எல்லாம் தம் கவிவளத்தால் உயிர்ப்பும் உணர்ச்சியும் வரச் செய்வ