பக்கம் எண் :

என

 

        முத்தப் பருவம்

427

என்று பாடியதில், முதல் இரண்டடிகளின் உட்பொருள், “இறைவரே, நீங்கள் உமையம்மையாரை மணந்திருந்தும், கங்கையாளையும் மணந்து இன்புற்றிருப்பது போல, யானும் பரவையாரை மணந்திருந்தும் சங்கிலியாரை மணக்க அவாவியுள்ளேன் ஆதலின், தடையின்றி என் வேண்டுகோளை நிறைவேற்றி யருளவேண்டும் என்பதன்றோ? புனிதவதியாராம் காரைக்கால் அம்மையார் தம்மைத் தணந்து பன்னாள் ஆகியும், தம் கணவர் வாராதது கண்டு பின்னர் அவர் மதுரையம்பதியில் மற்றொருத்தியை மணந்து மகவையும் பெற்று வாழ்வதாக உணர்ந்து, ஆண்டுச் சுற்றம் சூழச் சென்று தம் வருகையினைக் கணவனார்க்குக் கூறி அனுப்பக் கணவராம் பரமதத்தன், தம் மனைவி மகவுடன் வந்து அம்மையாருடைய திருவடியில் வணங்க, அம்மையார் அவ்வணக்கத்தை ஏற்காது அச்சத்துடன் ஒதுங்க, உறவினர்கள், “உன் மனைவியை நீ வணங்கலாமோ”? என்றபோது, பரமதத்தன், “இம்மாதரார் மானிடர் அல்லர்; மாபெருந்தெய்வம், நீங்களும் இவரை வணங்குங்கள்” என்று கூறக்கேட்ட அம்மையார் உடனே,

        எங்குஇவன் குறித்த கொள்கை
            இதுவெனில் இவனுக் காகத்
        தாங்கிய வனப்பு நின்ற
            தசைப்பொதி கழித்தங் குன்பால்
        ஆண்டுநின் தாள்கள் போற்றும்
            பேய்வடி வடியே னுக்குப்
        பாங்குற வேண்டும் என்று
            பரமர்தாள் பரவி நின்றார்

    என்று இவ்வாறு பாடிக்காட்டினார் சேக்கிழார்.  பரமதத்தன் அம்மையாரை வணங்கியபோது, “கணவர்தாம் வணங்கக் கண்ட” என்று பாடிய சேக்கிழார், ஈண்டு, அப்பரமதத்தனை “இவன் குறித்த கொள்கை” என்றும், “இவனுக்காக” என்றும், ஒருமைச் சொல்லால் குறித்துள்ள பொருட் சிறப்பே புலவர் பெருமானது பேரறிவுத் திறனுக்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.  வேண்டும் என்றே, “இவன், இவன்” என