பக்கம் எண் :

 

        முத்தப் பருவம்

429

அதுவும் சேய்த்தன்று நணித்து” என்றார்.  இதில், தண்ணீர் பந்தரை அமைத்தவர் அந்தண மரபினர் என்பதையும், அவர் உள்ளூர் வாசியினரே அன்றி, வெளியூரினர் அல்லர் என்பதையும், வீட்டிற்குத்தான் போயுள்ளாரே அன்றி, வேறிடத்திற்குச் சென்றார் அல்லர் என்பதையும், அங்ஙனம் சென்றவர் இப்போதுதான் சென்றனர் ஆதலின், வீட்டிற்குச் சென்றால் காணலாம் என்பதையும், அவ்வீடும் சேய்மையில் இல்லை,  சென்று காணுதற்குரிய முறையில் அண்மையிலேயே உள்ளது என்ற யாவற்றையும் சுருங்கிய முறையில் சொற்றதைக் காணவும்.

    சூதபா டலங்கள் எங்கும் சூழ்வழை ஞாழல் எங்கும்
    சாதிமா லதிகள் எங்கும் தண்தளிர் நறவம் எங்கும்
    மாதவி சரளம் எங்கும் வகுளசண் பகங்கள் எங்கும்
    போதவிழ் கைதை எங்கும் பூகபுன் னாகம் எங்கும்

என்ற இடத்து மரங்களின் பெயர்களை விளங்க வைத்தமை காண்க.

மறைவளர் திருவே வைதிக நிலையே வளர்ஞானப்
பொறையணி முகிலே புகலியர் புகலே பொருபொன்னித்
துறைபெறு மணியே சுருதியின் ஒளியே வெளியேவந்து
இறையவன் உமையாள் உடன்அருள் தரஎய் தினை என்பார்

என்ற கவி, நவின்றோர்க்கு இனிமை பயத்தலை உணரவும்.

    அப்பர் பெருமானார் அப்பூதி அடிகளார் மைந்தர் அரவு கடித்து இறந்ததை அறியாராய்த் தாம் உணவு கொள்ளுங் காலத்தே திருநீறு நல்க மூத்தமகனாரையும் அழையும் என்ற போது, அப்பூதியடிகளார் அவன் இறந்தான் என்று கூறி, அப்பர் பெருமான் உள்ளத்திற்கு உறுகண் உறுமாறு சொல்ல ஒண்ணாது என்று உளம் கொண்டவராய் நன்மொழி புகலும் முறையில், “இப்போது இங்கு அவன் உதவான்” என்று கூறியதாகச் சேக்கிழார் அப்பூதி அடிகளார் வாக்கில் அமைத்துப் பேசியது, நன்மொழி புணர்த்திப் புகன்றதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.