பக்கம் எண் :

New Page 1

 

       காப்புப் பருவம்

43

மும்மையால் உலகாண்ட

    மும்மைமறை யும்பரவும் மும்மைஉல கும்புகழும்
        மும்மையாப் பகரம்ஆதி
    மும்மைஉயிர் குறில்நெடில் தனித்தும்மத சவ்வூர்ந்தும்
        முதல்அமையும் நாமம்உற்றார்
    செம்மைபெறும் மும்மையாம் வருணத் துதித்துச்
        சிறந்தோங்கும் மூர்த்தியார்முன்
    செறியும்இரு மும்மையார் செம்பொன் பாதாம்புயம்
        சென்னிவைத் தேத்தெடுப்பாம்
    நம்மைஅருள் சிவபாத இருதயர் உளத்துவகை
        நண்ணஒண் பொருள்ஆதலால்
    நாடும்உழ வாரவலம் இயைதலால் யாவோரும்
        நாவலர் பிரான்என்னலால்
    வெம்மைதவிர் புகலியார் முதல்மூவ ரும்புகலும்
        வேதத் தமிழ்க்கண்உள்ள
    மெய்ம்மையை விரித்துத் தெரித்தருள்செய் குன்றையூர்
        வேந்தைப் புரக்கஎன்றே

    [அ-சொ] சிவபாத இருதயர் என்பார், திருஞான சம்பந்தருடைய தந்தையார்.  உவகை= மகிழ்ச்சி, நண்ண= பொருந்த, ஒண்பொருள்=ஒளியுடைய பொருளாம், குழந்தை (திருஞான சம்பந்தர்) உழவாரம்=புல் பூண்டுகளைச் செதுக்கும் ஓர் இரும்புக்கருவி.  வலம்=வலப்பக்கம் இயைதலால் பொருந்தி இருப்பதால், நாவலர்=நாவன்மையுடையவர், பிரான்=தலைவர், நாவலர் பிரான்=திருநாவலூரில் பிறந்த சுந்தரர், வெம்மை=பிறவியாகிய வெம்மை, சுரநோயாகிய வெப்பம்.  புகலியர்=புகலி என்னும் ஊரில், பிறந்த திருஞான சம்பந்தர், முதல்=முதன்மையான, மூவர்=திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி சுவாமிகள், புகலும்=சொல்லும், வேதத் தமிழ்=