இ
இறைவன் மைந்தன்
தன்னை அழையும் என்ற போது சிறுத் தொண்டரும் இப்போது உதவான் அவன் என்றதையும் எடுத்துக்காட்டலாம்.
துடியடியன மடிசெவியன துறுகயமுனி
தொடரார்
வெடிபடவிரி சிறுகுருளைகள்
மிசைபடுகொலை விரவார்
அடிதளர்வுறு கருவுடையன
அணைவுறுபிணை அலையார்
கொடியன எதிர்
முடுகியும்உறு கொலைபுரிசிலை மறவோர்
என்ற இடத்து
ஓசையுடைமையின் அழகைக் காண்க.
வீதிவிடங்கன் தேரேறி
வீதி வழியே சென்றபோது, பசுக்கன்று துள்ளி வந்து தேர்க்காலில் அகப்பட்டு இறந்தது, அதனை அறிந்த
அமைச்சர் மனுச்சோழனிடம் சென்று,
வளவநின் புதல்வன்
ஆங்கோர்
மணிநெடுந் தேர்மேல்
ஏறி
அளவில் தேர்த்
தானைசூழ
அரசுலாம்
தெருவில் போங்கால்
இளையஆன் கன்று தேர்க்கால்
இடைப்புகுந் திறந்த
தாகத்
தளர்வுறும் இத்தாய்
வந்து
விளைத்ததுஇத்
தன்மை
என்னும் இப்பாடலில்
அமைந்த பொருளாழத்தை அளவிட்டுக் கூறமுடியாது.
வளவ! என்று விளித்ததன்
பொருள், எல்லா வளங்கொண்டுள்ள சோழ மன்னா உனது அரசியலில் எந்தவிதக் குறையும் எற்படுதற்குக்
காரணம் இல்லை. இப்பசுவிற்கு கன்றிற்கு நடந்த நிகழ்ச்சிக்குக் காரணர் வேறு எவரும் இலர்,
உன் புதல்வனே ஆவான் என்பதை உணர்த்த “நின் புதல்வன் என்றும், அரண்மனை அருகு ஒன்றும் நடக்கவில்லை.
வெளியே நடந்தது என்பான் “ஆங்கு” என்றும், அரச மகன் ஏறிச்சென்ற தேர் எந்தவிதமான பழுதும்
இல்லாதது என்ற குறிப்பை “ஓர்” (ஓர்-ஒப்பற்ற) என்ற அடைமொழியைக் கொடுத்தும், அத்தேர் ஒலி
செய்யாது செல்லவில்லை, வருவார்
|