ம
மின்னேர்செஞ்
சடைஅண்ணல்
மெய்யருள்பெற்
றுடையவனோ
என்னேஎன் மனம்திரித்த
இவன்யாரோ
எனநினைந்தார்
இவ்விரு பாடல்களில்
முறையின் வைப்பு என்னும் அழகு வெகு பொருத்தமாக இருத்தலை அறியலாம்.
சுந்தரர் பரவையாரைக்
கற்பகத்தின் பூங்கொம்போ என்று எண்ணினர். கற்பகத்தின் நிழலில் வளர்ந்தவள் தெய்வயானை.
அந்தக் குறிப்புக்கு இணங்கப் பரவையார், சுந்தரரை முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ என்று
நினைத்தனர். சுந்தரர் காமன் தன் பெருவாழ்வோ (இரதியோ) என்று எண்ணியதற்கு ஏற்பப் பரவையார்
தன்னேரில் மாரனோ என்று எண்ணினர். “சுந்தரர் புண்ணியத்தின் புண்ணியமோ” என்று உரைத்ததற்கு
இணங்கப் பரவையார் புண்ணியத்தின் பயனாக விஞ்சையராகப் பிறப்பதும் உண்டு ஆதலின், தார்மார்பில்
விஞ்சையானோ என்று வியந்து பாராட்டினர். சுந்தரர், ‘சிவனருளோ” என்று தீர்மானித்ததற்கு
இணங்கப் பரவையார், “சடையண்ணல் மெய்யருள் பெற்றுடையவனோ” என்று சிந்தித்து முடிவு கண்டனர்.
இம்முறையில் முறையின் வைப்பு என்னும் அழகு முற்றிலும் பொருத்த மாதலைக் காணலாம்.
சேக்கிழார்
பெருமானார் நாட்டு வளம் கூறுங்கால், பொருள்களைத் தெளிவுற வர்ணிக்குங்கால், உலகமலைத்து விடாது
உள்ளது இதுவே என்று உணரும் முறையில்,
கரும்பல்ல நெல்என்னக்
கமுகல்ல கரும்பென்னச்
சுரும்பல்ல குடைநீலத்
துகள்அல்ல பகல்எல்லாம்
அரும்பல்ல முலையென்ன
அமுதல்ல மொழிஎன்ன
வரும்பல்லா லாயிரம்
கடைசி மடந்தையர்கள் வயல்
( எல்லாம்
என்று பாடிய திறத்தால்
உலகம் மலையாமை ஆகிய அழகு இருத்தலை உணரலாம்.
|