விழுமியது பயத்தலாவது உயர்ந்த பொருள் நயம் நூல்களில் அமைந்திருத்தலே ஆகும். புலவர் உலா பாடுதல் வழக்கம்.
இதனைத் தனி நூலாகவேனும், காவியங்களில் இணைத்தேனும் பாடுவர். இதனைச் சீவக சிந்தாமணி,
தேசிக முடியும் திருந்துபட்
டுடையும்
பாச மாக நின்றுபன்
மலர்க்கழுநீர்
மூசிவண் டிமிரும்
மொய்யலங்கல் தாழக்
காசில்கா மம்செப்பிக்
கண்ணினால் இரப்பர்
என்று பாடிச் சீவகனைக்
கண்ட மாதர்கள் அவனிடத்துக் காம வேட்கை கொண்டதைக் கூறுகிறது.
இராமாயணத்தில் கம்பர்,
ராமன் உலாவரும் காலத்துக் கண்ட மாதர்கள் நிலையைக் கூறும்போது,
நனிவ ருந்தி நலம்குடி
போயிடப்
பனிவ ருங்கணார்
பாசிழை அல்குலாள்
முனிவ ரும்குல மன்னரும்
மொய்ம்பறத்
தனிவ ரும்கொல்
கனவின் தலைஎன்றாள்
எனக் கூறி, இராமனைத்
தனித்துத் தழுவி இன்புற ஒரு மாது நினைத்ததாகப் பாடினார்.
சேக்கிழாரும் தமது
புராணத்தில் உலாப் பாடுகிறார். அங்கு மாதர்கள் சுந்தரரைக் கண்ட நிலையினைக் கூறும்போது,
இவ்வாறு தம் கற்புக் கெடும் வகையில் மாதர்கள் நடந்து கொள்ளாது, சீரிய முறையில்,
கண்கள்எண் ணிலாத
வேண்டும்
காளையைக் காண
என்பார்
பெண்களில்
உயரநோற்றாள்
சடங்கவி பேதை
என்பார்
மண்களி கூரவந்த
மணம்கண்டு
வாழ்ந்தோம்
என்பார்
கண்களில் நிறைந்த
கீதம்
பாடுவார் ஆடுவார்கள்