பக்கம் எண் :

என  

434

       முத்தப் பருவம்

என்று பாடிக்காட்டி, அவர் தம் கற்பின் விழுப்பத்தை எடுத்துக் காட்டியதைக் காணும்கால் ‘இதனினும் விழுமியது பயத்தற்கு ஏற்ற உதாரணம் யாது வேண்டும்? உதாரணங்களைக் கூறும்போதெல்லாம்’ விழுமிய கருத்துக்கள் தோன்றவே பாடுவர்.  “அரனுக்கு அன்பர் ஆலின சிந்தைபோல அலர்ந்தன் கதிர்கள் எல்லாம்” என்றும், “வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி எல்லாம்” என்றும் கூறுமிடத்துக் காண்க.

    சேக்கிழார் பெருமானார் கூறும் உதாரணங்கள் விழுமிய பொருள் பயப்பதோடு இன்றி, விளக்கமான பொருள் கொண்டதாகவும் இருக்கும்.  சிறுத்தொண்டர் இல்லத்திற்கு வந்த பயிரவர், தொண்டரிடம் பெரும்வேதனை தரத்தக்க மொழிகளைக் கூறப்போவதாகக் கூறுமிடத்து அவர் திருவாயால் “இன்னம் புண்செய் நோயில் வேலெறிந்தால் போலும் புகல்வது ஒன்று” என்று புகல வைத்தபோது, எவர்க்கும் விளங்கும் வகையில் எடுத்துக்காட்டிய உதாரணத்தாலும், முத்தநாதன் வெளித்தோற்றத்தில் சிவவேடப்பொலிவுடன் இருந்தாலும், அவன் உள்ளத்தில் மாசு படிந்திருந்ததை விளக்கும் முகத்தால், “மைப்பொதி விளக்கே அன்ன மனத்தினுள் கறுப்பு வைத்து” என்றும் கூறி விளங்கு உதாரணம் நூலில் உரைத்திருப்பது கொண்டும், பெரிய புராணத்தில் பத்து அழகுகள் பரவி இருப்பதைக் காணலாம்.  இக்காரணங்களைக் கொண்டே ஆசிரியர் ஈண்டு, “சுருங்கச் சொல்லல் முதலால் தோட்டி அமைய” என்று பாடினர்.

    பெரிய புராணத்தில் அமங்கலமாகக் கூறுமிடத்தெல்லாம் அவ்வமங்கலத்தினை தம் திருவாயால் கூற அஞ்சிய சேக்கிழார் பெருமானார் மங்கலமாகவே கூறிச் சென்றிருப்பதைக் காணலாம்.  முத்தநாதன் மெய்ப்பொருள் நாயனாரை வெல்ல பலவகையிலும் முயன்றும் பயனுறாது பின்னர் வஞ்சக வேடத்தனாய்ச் சென்று அவரை முடித்து விட்டதைக் கூறவந்த புலவர் பெருமானார்,