பக்கம் எண் :

புத

 

        முத்தப் பருவம்

435

        புத்தகம் அவிழ்ப்பான் போன்று
            புரிந்தவர் வணங்கும் போதில்
        பத்திரம் வாங்கித் தான்முன்
            நினைந்த அப்பரிசே செய்ய

என்று கூறினர்.

    அவன் நினைந்தவண்ணமாக அவரைக் கொல்லலாகிய செயலைச் செய்ததை எத்துணை மங்கலமான முறையில் கூறிப் போந்தார் புலவர் நாயகம்! இவ்வாறே அதிசூரன் என்பானும் வஞ்சக வேடத்தனாய்த் தோன்றியபோது (அதாவது வெண்ணீறே என்றும் அணியாத அவன் அன்று, வெண்ணீறணிந்து தன் கேடகத்தால் மறைத்துச் சென்றது) ஏனாதி நாயனார் அவ்வெண்ணீற்றைக் கண்டதும், இந்தச் சிவவேடப் பொலிவுடைய நாயனாருடனா நாம் மலைவது என்று மயங்கி, போர் செய்ய வீர உணர்ச்சி இன்றிப் பொய்ப் போர் புரிகையில், அதிசூரன் அவரைக் கொன்றனன்.  இச்செய்தியினையும் சேக்கிழார் மங்கலமாக “முன்நின்ற பாதகனும் தன் கருத்தே முற்றுவித்தான்” என்று பாடினார்.  மெய்ப்பொருள் நாயனார் புராணத்துள் அந்நாயனார் முத்த நாதனால் குத்துண்டு இறந்தபோது, “புரவலர் மற்றுள் ஆடுகப் பூங்கழல் சிந்தை செய்தார்” என்றே புகன்றார்.  சிறுத்தொண்டர் தமது மகன் கழுத்தைச் சிதைத்த செய்தியினையும், “அரியவினை செய்தார்” என்றார்.  இதன் பொருள் எங்கும் எவரும் செய்யாத அருமையான செயலைச் செய்தார் என்னும் பொருள் படப்பாடியுள்ளதைக் காண்க.  இக்காரணம் பற்றி ஈண்டு “அமங்கலமாம் சொற்கள் புணராது அறக் களைந்து” என்று சுட்டிக் காட்டினர்.

    சேக்கிழார் பெருமானார் பெரிதும் நம்பியாண்டார் கருத்தையே தழுவிச் செல்பவராயினும், சிற்சில இடங்களில் ஒரு சிறிது முரண்பட்டும் செல்லுவர்.  இதற்குச் சான்றாக அமர்நீதி நாயனார் புராணத்தை எடுத்துக் காட்டலாம்.  நம்பியண்டார் நம்பிகள் அமர்நீதியாரைப் பற்றிக் கூறவந்த இடத்து,