பக்கம் எண் :

New Page 1

44

             காப்புப் பருவம்

தேவாரத் திருமுறை, குன்றைவேந்தை=குன்றத்தூரில் பிறந்த சேக்கிழாரை, புரக்க=காப்பாற்றுக, மும்மை=மூன்றாகிய, மறை=வேதம், பரவும்-போற்றும், மும்மை உலகு=மண், விண், கீழ் என்னும் மூன்று உலகங்களும்,

    நாம்=பெயர், உற்றார்=பொருந்தியவர், செம்மை= நேர்மை, மும்மையாம் வருணம்-பிராம்மண, க்ஷத்திரிய வணிகர் என்னும் மூன்று மரபு, முன்-முதலாக, செறியும்-பொருந்தி இருக்கும், இரு மும்மையார்-ஆறு நாயன்மார்கள், பொன்-அழகிய பத+அம்புயம்-திருவடிகளாகிய தாமரை, சென்னி-தலையில், ஏத்தெடுப்பாம் - துதிப்பாம் மும்மையாப்பு=மூன்றாவது பாடலாகிய “மும்மையால் உலகாண்ட”என்ற பாடல். அப்பாடல்,

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
    முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவர்க்கும் அடியேன்
    திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க    
    வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

என்பது,

    [விளக்கம்] “ அகரம் ஆதி மும்மை உயிர்க்குறில்’ அ, இ, உ என்னும் மூன்று குற்றெழுத்துக்கள் நெடில் என்றது ஊ என்னும் எழுத்தாகும்.  இவை தனித்தும் ம, த, ச ஊர்ந்தும் முதல் அமையும் நாமம் உற்றார் என்பதன் பொருள், மூர்த்தியார், முருக நாயனார், உருத்திர பசுபதியார், திருநாளைப் போவார் திருக் குறிப்புத் தொண்டர்’ சண்டேசரர்என்பது.

    தனித்து உகரத்தை முதலாகக் கொண்டவர் உருத்திர பசுபதியார்.  உகரம் ஊர்ந்த மவ்வை (மகரமெய்யை) முதலாக உடையவர் முருகநாயனார்.  ஊகாரத்தோடு மகரம் ஊர்ந்த எழுத்தை முதலாகக் கொண்டவர் மூர்த்தியார்,