சார்ந்தார்க்கு வேண்டியதைத்
தர வல்லது. ஈண்டுச் சேக்கிழாராகிய கற்பகம், நில உலகில் வாழ்ந்து, பெரிய புராணத்தின்
வாயிலாக, இறைவனிடத்து அன்பு, அடியார் இடத்து அன்பு முதலானவற்றை வேண்டியவர்க்கு அளித்து நிற்கின்றது.
சேக்கிழார் ஞானக் கடலே ஆவார்.
மற்றி தற்குப் பதிகம்வன்
தொண்டர்தாம்
புற்றி டத்தெம்
புராணர் அருளினால்
சொற்ற மெய்த்திருத்
தொண்டத் தொகையெனப்
பெற்ற நற்பதி கம்தொழப்
பெற்றதால்
என்னும், இச்செய்யுளில்
பதிகம் என்னும் வடமொழிச் சொல்லை இரு முறை பெய்துள்ளார். முன்னது பிரதீகம் என்னும் வடசொல்லின்
திரிபு. பின்னது பங்கிகம் என்னும் வடசொல்லின் திரிபு. இதனால் இவரது வடமொழி ஞானம் பெறப்படுகிறது.
அருக்கன்முதல்
கோள்அனைத்தும் அழகியவுச்
( சங்களிலே
பெருக்கவலி யுடன் நிற்க
என்று பாடியதனால், இவர்தம்
சோதிட ஞானத்தையும் அறியலாம்.
முந்தைமறை நூல்மரபின்
மொழிந்தமுறை
எழுந்தவேய்
அந்தமுதல் நால்இரண்டில்
அரிந்துநரம்
புறுதானம்
வந்துதுளை நிரைஆக்கி
வாயுமுதல் வழங்குதுளை
அந்தமில் சீர்
இடையீட்டின்
அங்குலி எண்களின்
அமைத்து
எண்ணியநூல்
பெருவண்ணம்
இடைவண்ணம்
வனப்பென்னும்
வண்ணஇசை வகைஎல்லாம்
மாதுரிய நாதத்தில்