பக்கம் எண் :

நண  

450

       முத்தப் பருவம்

        நண்ணியபா ணியும்இயலும்
            தூக்குநடை முதற்கதியில்
        பண்ணமைய எழும்ஓசை
            எம்மருங்கும் பரப்பினார்

என்று பாடி இருப்பது கொண்டு இவரது இசை ஞானத்தையும் அறியலாம்.

    விடம் தீண்டப்பட்டவர்க்கு ஏறும் வேகம் எட்டு.  அவை, மூர்ச்சை, வெதுப்பு, கண் செருகல், வாந்தி, கபம், உணர்ச்சிக் கேடு, விரைப்பு, மரணம் என்பன.  இது மருத்துவ நூலின் கண்ட உண்மை.  இதனைச் சேக்கிழார் நன்கு உணர்ந்த காரணத்தினால்தான்,

        எரிவிடம் முறையே ஏறித்
            தலைக்கொண்ட ஏழாம்வேகம்
        தெரிவுற எயிறும் கண்ணும்
            மேனியும் கருகித் தீந்து
        விரியுரை குழறி ஆவி
            விடக்கொண்டு மயங்கி வீழ்வான்
        பரிகலக் குருத்தைத் தாயர்பால்
            வைத்துப் படிமேல் வீழ்ந்தான்

என்று பாடிக் காட்டித் தமது மருத்துவ ஞானத்தை அறியச் செய்துள்ளனர்.

    சேக்கிழாரது உறுப்பு நூல் ஞானத்தை,

‘இருநிலத்தின் மிசைதோய்ந்த எழுதரிய திருவடியும்
திருவடியில் திருப்பஞ்ச முத்திரையும் திகழ்ந் திலங்க.’

என்னும் அடிகளில் குறிப்பிட்டிருப்பது கொண்டு அறியலாம்.

    இவ்வாறு பல ஞானங்கட்கு உறைவிடமாக இவர் இருந்தமையின், ஞானவாரிதியே ஆவார்.  இவர் தம் ஞானத்தில் குற்றம் காண முடியாமையின் இவர் ஞானம், “நிமல ஞானமாயிற்று.”

    சேக்கிழார் சைவ வாழ்வே பெருவாழ்வாகக் கொண்டவர். இதனை அவர் திருவாக்குகள் பல தெரிவித்து நிற்