கின்றன. “மிகு சைவத்துறை
விளங்க” என்று பாடுதலாலும், அருகனைத் தெய்வமாகத் தம் வாயினால் கூறுதற்கும் விரும்பாராய்
அமணர்கள் தம் பொய்கொள் விமானம்” என்றும் சைவ சமயம் மேம்பாட்டையும் சிவனடியார்களின்
சிறப்பையும் கூறுமிடத்து,
அருட்பெருகு தனிக்கடலும்
உலகுக் கெல்லாம்
அன்புசெறி கடலுமாம்
எனவும் ஓங்கும்
பொருட்சமயம் முதற்சைவ
நெறிதான் பெற்ற
புண்ணியக்கண் இரண்டெனவிப் புவனம்உய்ய
இருட்கடுவுண் டவரருளும்
அகில மெல்லாம்
ஈன்றாள்தன் திருவருளும்
எனவும் கூடித்
தெருட்கலைஞா னக்கன்றும்
அரசும் சென்று
செஞ்சடைவா னவர்கோயில்
சேர்ந்தார் அன்றே
என்று பாடித் தம் அடியார்
பக்தியையும் காட்டியுள்ளமையின் சைவப் பெருவாழ்வு ஆயினர். நீடு சைவ சமயம், எல்லாச் சமயக்
கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டு துலங்குகின்றமையின் நீடும் சைவம் என்றனர் மேலும்,
வடஅமெரிக்காவில் கோலறடோ என்னும் ஆற்றின் அருகே உள்ள ஒரு சிறு குன்றின்மீது சிவன்
கோயில் என்ற ஓர் இடம் இருக்கிறது. இவ்விடம் பல்லாயிரம் ஆண்டுக்கு முற்பட்டது என்பர் ஆய்வாளர்.
In the wild mountanious State of Colorado seventh largest in America scientist of the
W.S.Musem of Natural History three months ago announced discovery of a Lost
World. The focal point was Shiva’s grant Temple a half square mile of solid
rock plateau isolated from the main land by 9000 ft. Canyons eroded by rivers
some 200000 years ago.
- London news
review 23-9-1937
ஆசியா கண்டத்து
வழிபாட்டிலும் சைவ வணக்கக் குறிப்புக் காணப்படுகிறது. அவர்கள் கடவுள் இடபத்தில்