வல்லது . இதனை அனபாயன்
சீவகசிந்தாமணியில் ஈடுபட்டிருந்ததை அறிந்து உடனே அவனிடம், “சமணர் பொய்நூல் இது மறுமைக்கு
ஆகாது இம்மைக்கும் அற்றே வளமருவுகின்ற சிவ கதை இம்மைக்கும் மறுமைக்கும் உறுதி” என்று தம் நாவன்மையால்
கூறக் கேட்டதும் சோழன் அவரை நோக்கி,
அவகதையாய்ப் பயன்அற்ற
கதையீ தாகில்
அம்மையும் இம்மையும்
உறுதிபயக்கத் தக்க
சிவகதைஏது ***
சாற்றும்
என்று கேட்கும் அளவுக்கு
வந்தனன் எனின், இது சேக்கிழாரின் நாவன்மையைக் காட்ட வல்லது அன்றோ? ஆகவே, இவர் பெருநாவலர்
ஏறு ஆயினர். தம் நாவன்மையால் வெற்றியும் கண்டவர் ஆதலின் வலஞ்சார் பெருநாவலர் ஏறும் ஆயினர்.
சிந்தாமணி தெய்வலோகக்
கல். இது நினைத்ததை அளிக்கும் இயல்புடையது. அதுபோலப் பெரிய புராணமாம் காப்பியமும் அறிஞர்க்கும்
அன்பர்க்கும் நினைத்ததை அளிக்கவல்லது. அதனை யாத்துத் தந்தவர் சேக்கிழார் ஆதலின், அவர்
மாறா அருள் சிந்தாமணியானார். சேக்கிழார் அருட் பண்பும் உடைவர் ஆதலின், அப்பண்பைப் பல
இடங்களில் பாடியும் காட்டியுள்ளார். திருநாவுக்கரசர் புராணத்தில்,
தம்பியார் உளராக
வேண்டும்என வைத்ததயா
உம்பருல கணையஉறு நிலைவிலக்க
உயிர்தாங்கி
அம்பொன்மணி நூல்தாங்கா
தனைத்துயிர்க்கும்
( அருள்தாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து
திலகவதி யாரிருந்தார்
என்று பாடியுள்ளார்.
சேக்கிழார் அறிஞர்களின்
மதியுள் பெருஞ் சுடராய்த் திகழ்பவர் என்பதை, அவரைப்பற்றித் தோத்திரங்கள் பல புலவர்
பெருமக்களால் பாடப்பட்டது கொண்டு தெளிய