பக்கம் எண் :

 

456

       முத்தப் பருவம்

லாம்.  வடநூற் கடலும், தென்னூற் கடலும் நிலைகண்டுணர்ந்த சிவஞான முனிவர்,

    தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி
    வாக்கி னாற்சொல்ல வல்ல பிரான்எங்கள்
    பாக்கி யப்பய னாய்ப்பதி குன்றைவாழ்
    சேக்கி ழான்அடி சென்னி இருத்துவாம்

என்று பாடித் துதித்தனர்.

சிவஞான முனிவர் காஞ்சிப் புராணத்தில்,

    திருத்தொண்டை நன்னாட்டு நானிலத்தைத்
        திணைவளனும் தெரித்துக் காட்ட
    மருத்தொண்டை வாய்ச்சியர்சூழ் குன்றைநகர்க்
        குலக்கவியே வல்லன் அல்லாற்
    கருத்தொண்டர் எம்போல்வார் எவ்வாறு
        தெரிந்துரைப்பர்

என்று பாராட்டியுள்ளார்.

    சபாபதி நாவலர், சிதம்பர சபாநாதர் புராணத்துள்,

    ஞாலம்மலை கடல்தன்னில் பெரியதெது
        எனஎடுத்து ஞான மாள்செங்
    கோல் அறபாயன்வின வியமுத் திறக்குறிப்பைக்
        குறிப்பின் ஓர்ந்து
    சாலவுயர் திருக்குறள்மூன் றிறையாக
        எழுதியவன் அரசு தாங்கி
    வாலறிவால் திருத்தொண்டர் புகழ்விரித்த
        சேக்கிழார் மலர்த்தாள் போற்றி

என்று போற்றினர்.

    ஆதிப் பிரான்அடி யார்அறு பான்மூவர்
    நீதிச் சரிதைஎங்கே நீறெங்கே-ஓதிச்
    செவிக்குமொழி ஐந்தெங்கே சேக்கிழான் எந்தை
    புவிக்குவரல் இன்றேல் புகல்

என்று பூவை கலியாண சுந்தர முதலியார் பாடிப் பரவினர்.