பக்கம் எண் :

 

        முத்தப் பருவம்

457

சிரங்கொள்திருத் தொண்டர்புராணத்தை அளவிடற்குச் சேக்கிழார்க் கெளிதலது தேவர்க்கும் அறிதே

என்று துதித்தனர் உமாபதி சிவாசாரியர்.

  காவலவன், மண்ணில் கடலில் மலையில் பெரிதென்என
  எண்ணிஎழு திக்கொடுத்த ஏற்றக்கை

எனக் கம்பரும் கனிவுடன் போற்றியுள்ளார்.  இன்னோரன்ன காரணங்களால் சேக்கிழார் மதியார் மதியுள் எழுஞ் சுடராகவும், வாழ்த்துவார் தம் பெரும் பேறாகவும் திகழ்கின்றனர்.

    சேக்கிழார் பிறவி நீங்கிப் பேரின்ப நிலை உற்ற காரணத்தால் ஆசிரியர், “தாயர் கலஞ்சார் முலைப்பால் அருந்தாது” என்றனர்.

    சேக்கிழார் பெருமானாரைப் போலப் பக்திச் சுவை ததும்பப் பாடவல்லவர் எவரும் இலர்.  இவரது வர்ணனைகளும் யாவும் பக்தி ரசம் சொட்டும் நிலையில் அமைந்திருக்கும்.  “அரனுக்கு அன்பர் ஆலின் சிந்தைபோல அலர்ந்தன கதிர்கள் எல்லாம்” என்றும்,

பத்தியின் பால ராகிப் பரமனுக் காளாம் அன்பர்
தத்தமில் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல்
மொய்த்தநீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மைபோல விளைந்தன சாலிஎல்லாம்

என்றும், இப்படிப் பல எடுத்துக்காட்டுக்களை எடுத்து இசைக்கலாம்.  ஆகவே இவர், “புலஞ்சார் பத்திவிளை நிலமே” எனப்பட்டார்.

    சேக்கிழார் பெருமானார் திருக்கோவில்களில் சிலை, விக்கிரக வடிவில் வைத்துத் துதிக்கப்பெறும் பேறு பெற்றனர்.  இப்பேறு பிறப்பு இறப்பு ஒழித்த கடவுள் அடியார்களுக்கே எய்துவதாகும்.  மேலும், உமாபதி சிவாசாரியார் சேக்கிழார் திருவடி இணைகளைத் துதிப்பவர், பிறவிப் பிணியினின்றும் விடுபடுவர் என்பதை,