பக்கம் எண் :

அண  

458

       முத்தப் பருவம்

        அண்ட வாணர்தொழு தில்லை அம்பலவர்
            அடிஎடுத் துலகெ லாம்எனத்
        தொண்டர் சீர்பரவு சேக்கி ழான்வரிசை
            துன்று குன்றைநகர் ஆதியன்
        தண்ட காதிபதி திருநெ றித்தலைமை
            தங்கு செங்கைமுகில் பைங்கழல்
        புண்ட ரீகமலர் தெண்ட னிட்டுவினை
            போக்கு வார்பிறவி நீக்குவார்

என்று போற்றினர்.

    இங்ஙனம் சேக்கிழார் பெருமானார் திருவடிகளை வணங்குபவர்கள் பிறவிப் பிணி நீங்குவர் என்றபோது, சேக்கிழார் அதனின்று நீங்கியவர் என்பது தேற்றம். எனவே, அவர் “போக்கு வரவில் பூரணமே” எனப்பட்டார். அதனை விளக்க மேலும் பிள்ளையவர்கள், “இனிமேல் ஒரு தாயர் கலஞ்சார் முலைப்பால் அருந்தாத கனிவாய்” என்றும் போற்றினர்.  பிறவி எடுத்தால் அன்றோ தாயர் முலைப் பாலினை அருந்த இயலும்?

    பிறவி தோறும் தாய்மார்தரும் பால் திருப்பாற்கடலும் சிறிதாகும் அளவுக்கு இருக்கிறது என்பதைச் சோனாசல தேவர் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் ஒடுக்கத்தில் நிஷ்டை கூடி இருந்தபோது,

எடுத்தசன னங்கள்தொறும் ஈன்றெடுத்த தாயார்
கொடுத்த முலைப்பால் அனைத்தும்கூட்டில் அடுத்துவளர்
பன்னா கணைத்துயிலும் பாலாழி யும்சிறிதாம்
மன்னா சிதம்பரதே வா

என்று தோத்தரித்ததன் மூலம் அறியலாம்.

    சேக்கிழார் யாவர் உள்ளத்தும் இனிக்கும் சுவை அமுதாகத் திகழ்ந்தனர் என்பதை உமாபதி சிவனார் பலபடப் புனைந்து பாடியுள்ளமையினால் தெரியலாம்.  இதனை,