பக்கம் எண் :

 

        முத்தப் பருவம்

459

வாரணத்தில் இவரைவரக் கண்டதிரு வீதி
    மறுகுதொறும் தூய்மைசெய்து வாழைகளை நாட்டிப்
பூரணகும் பமும்அமைத்துப் பொரியும்மிகத் தூவிப்
    பொன்னரிமா லையும்நறும்பூ மாலைகளும் தூக்கித்
தோரணங்கள் நிரைத்துநிரை நறுந்தூபம் ஏந்திச்
    சுடர்விளக்கும் ஏற்றிஅணி மணிவிளக்கும் ஏந்தி
ஆரணங்கள் விரித்தோதி மாமறையார் எதிர்கொண்
    டறுகெடுப்ப வாழ்த்தெடுத்தார் அரம்பையார்
                                   ( எல்லாம்

என்று போற்றியதனால், இவர் எவர்க்கும் சுவை அமுதாய்த் துலங்கிய உண்மை புலனாகிறது.                                                

(46)

6.    நூலாறு தேர்ந்தவர் உஞற்றும்அக் குண்டங்கள்
          நோக்கிஅழல் பாய மேய    
      நுவல்புலவர் உதரகுண் டத்தில் சருப்பாய
          நோன்மைசால் மேகம் எல்லாம்
      சாலாறு பாயவலை யெறியுததி பாயத்
          தவாதருவி வரைகள் பாயத்
      தையலார் குரிசிலார் மேல்சம்ப ராரிபொழி
          சரம்எலாம் பாய மலரில்
      காலாறு பாயஅம் மலர்மதுப் பாயக்
          கமழ்ந்தபட் டத்தி னின்றுங்
      கற்பம் கழுத்தொடிய வாளைபா யப்பொய்கை
          கருமேதி பாய மிக்குப்
      பாலாறு காலாறு பாய்தொண்டை நன்னாட
          பவளவாய் முத்தம் அருளே
      பரவுசீர் உலகெலாம் விரவுசே வையர்பிரான்
          பவளவாய் முத்தம் அருளே.

    [ அ. சொ. ]  நூல்-வேதநூல்,  ஆறு-ஆறு வகையான  சாத்திரங்கள்,   உஞற்றும்-நடத்தும், குண்டங்கள்-யாக