கடல
கடலில் சென்று ஆறுகள்
பாய்வதனாலும், மலைகளின் உச்சியினின்று அருவிகள் பாய்வதனாலும் மலர்களில் தேன் இருத்தலாலும்
ஈண்டு ஆசிரியர் “மேகம் எல்லாம் அலை உததிபாய” என்றும், “அருவி வரைகள் பாய” என்றும்,
“மலர்மதுப் பாய” என்றும் ஈண்டு கூறினர்.
சம்பராரி என்பவன்
மன்மதன். அவன் சம்பரன் என்போனைக் கொன்றவன்.
இதனை இரதி,
செம்பதுமை திருக்குமரா
தமியேனுக்
காருயிரே திருமால்
மைந்தா
சம்பரனுக்
கொருபகைவா கன்னல்வரிச்
சிலைபிடித்த
தடக்கை வீரா
வம்பவளக் குன்றனைய
சிவன்விழியால்
வெந்துடலம்
அழிவுற் றாயே
உம்பர்கள்தம்
விழிஎல்லாம் உறங்கிற்றோ
அயனாரும் உவப்புற்
றாரோ
என்று புலம்பிய புலம்பலில்
குறிப்பிட்டிருப்பது காண்க.
மன்மதன் மோகம்
ஊட்டுதற்கு ஐந்து மலர் அம்புக்களைக் கொண்டவன். அவை தாமரை, அசோகு, மா, முல்லை,
கருங்குவளை. இதனால்தான் ஈண்டு, “சரமெலாம்” என்றனர். மன்மதன் காதலர்கள் இடையே நின்று
அவன் கணைகளைச் செலுத்துவது கடனாகக் கொண்டவன் என்பதைச் சேக்கிழார் பெருமானார், “நாவலர்
காவலர் நின்றார் நடுநின்றார் படை மதனார்” நடுநின்றார் என்பதனால், இருவர்மீது அம்பு பாய
இடை நின்றான் மன்மதன் என்பது பெற்றாம்.
நீர்வளத்தின் மிகுதியினைப்
புலவர்கள் வாளையின்துள்ளலைக்கூறி வர்ணித்தல் மரபு. குமரகுருபரரும் வாளை ஆகாயம் அளவு பாய்ந்து
சந்திரனில் மோதி அமுத வெள்ளம் பொழியச் செய்தது என்பதை, “மதிமுயல் கலைகிழித்து இழி அமுத
வேள் அருவி பாய வெடிபோய் மீளும்தகட்டு அகட்டு இளவாளை மோத” என்றனர். இக்கருத்தைப்
|