பக்கம் எண் :

என

 

        முத்தப் பருவம்

467

என்று பாடி இருப்பதையும் அறிதல் வேண்டும்.   குமர  குரபரர்  தாம்  பாடிய   மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழில் வாளையின் அட்டகாசத்தை,

        ஓடும் பாடலை முகில்படலம்
            உவர்நீத் துவரி மேய்ந்துகரு
        ஊறும் கமஞ்சூல் வயிறுடைய
            உகைத்துக் கடவுள் கற்பகப்பூங்
        காடும் தரங்கக் கங்கைநெடும்
            கழியும் நீந்தி அமுதிறைக்கும்
        கலைவெண் மதியின் முயல்தடவிக்
            கதிர்மீன் கற்றை திரைத்துதறி
        மூடும் ககன வெளிக்கூட
            முகடு திறந்து புறங்கோத்த
        முந்நீர் உழக்கிச் சினவாளை
            மூரிச் சுறவி னோடுவிளை
        யாடும் பழனத் தமிழ்மதுரைக்
            கரசே தாலோ தாலேலோ
        அருள்சூல் கொண்ட அங்கயற்கண்
            அமுதே தாலோ தாலேலோ

என்று பாடியிருப்பதையும் படித்து இன்புறலாம்.

    சந்திரனில் அமுதுண்டு என்பது,

        பொன்மய மான சடைமதிக் கலையின்
            புத்தமுது குத்தனர் அதுபோய்ச்
        சின்மய மானதம்மடி அடைந்தார்ச்
            சிவமய மாக்கிய செயல்போல்
        தன்மய மாக்கி அந்நகர் முழுதும்
            சாந்திசெய் ததுவது மதுர
        நன்மய மானதன் மையால் மதுரா
            நகர்என உரைத்தனர் நாமம்

என்ற திருவிளையாடற் புராணப் பாடலால் தெரிய வருகிறது.  மதியில் அமுதிருத்தலை மேலே காட்டப் பட்ட குமரகுருபரர் பாடல்கொண்டும் அறியவும்.