பக்கம் எண் :

New Page 1  

468

       முத்தப் பருவம்

    தொண்டை நாட்டில் பொய்கைகள் மிகுதியும் உண்டு என்பதைக் கச்சியப்பர் கழற வரும்போது,

    முன்னுறு பிணிகள் மாற்றிடும் பொய்கை
        முதல்வர்கள் முடிவுறுங் காலைச்
    செந்நிற மாகும் பொய்கைமுக் காலம்
        தெரித்திடும் பொய்கைகண் நுதலோன்
    தன்னடி காட்டும் பொய்கை வேண்டியது
        தந்திடும் பொய்கை மெய்ஞ்ஞானப்
    பொன்னியும் செல்வம் வசீகரம் தருநால்
        பொய்கையோ டொன்பதாம் பொய்கை

என்று குறிப்பிட்டனர்.

    தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சியம்பதியில் இத்துணைச் சிறப்புடைய குளங்கள் இருக்குமானால், தொண்டை நாடு முழுதும் எத்துணை இருக்கும் !  ஆகவே ஆசிரியர், “தடம் மலியும் தொண்டை நாடு” என்றனர்.               

(48)

8.      மிக்குவரு வெள்ளத் தெதிர்ந்தேறு பருவரால்
           வேகத் துருண்டு போதும்
       வேழத்தை முட்டுபு வெகுண்டு வெடிகொண்டுதாய்
           விண்ணம் துளைத்து விரைவில்
       புக்குமகிழ் மழஇளங் கன்றது தெறித்தெழீஇப்
           போயதெங் கென்று நாடும்
       புந்திப் பெருங்காம தேனுவின் மடித்தலப்
           பொம்மல்குழை வெய்த முட்டத்
       திக்குநிக ழப்பசுப் பொழிகின்ற பால்வரால்
           செய்த புழையூ டிறங்கித்
       திரைகரை எறிந்துவரு குடிஞைக்கு முன்புதான்
           செய்தபெய ரைப்பு துக்கும்
       பக்குநவில் அருவளம் படுதொண்டை நன்னாட
           பவளவாய் முத்த மருளே
       பரவுசீர் உலகெலாம் விரவுசே வையர்பிரான்
           பவளவாய் முத்த மருளே.