பக்கம் எண் :

New Page 1

 

        முத்தப் பருவம்

469

    [அ. சொ.]  போதும்-போகும், வேழத்தை-யானையை, வெடிகொண்டு-பயந்து, தாய்-தாவி, விண்ணம்-ஆகாயத்தை, மழ இளங்கன்று-மிக இளைய கன்று, தெரித்து- துள்ளி, எழீஇ-எழுந்து, புந்தி-மனம், குழைவு-நெகிழ்வு, புழையூடு-துவாரத்தின் வழியாய், திரை-அலை, குடிஞைக்கு-ஆற்றுக்கு, (பாலாற்றுக்கு) பக்கு-பகுத்து, நவில்-கூறுதற்கு, பொம்மல்-பருமன், திக்குநிகழ்-திகைளில் புகழ் பெற்ற.

    விளக்கம் : ஈண்டு வரால் மீனின் வளத்தைக் கூறுகின்றனர் அது, பெருவெள்ளத்தையும் எதிர்த்து வருகின்றது எனில், அது வன்மை மிக்கது என்பது சொல்லாமலே பெறப்படுகின்றது.  அப்படி எதிர்த்து வரும் வரால் ஆற்று வெள்ளத்தில் உருண்டு வரும் யானைமீது மோதுவதால் சினம் மிகுந்து, ஆகாயம் அளவு தாவி ஆகாயத்தையும் துளைத்தது.  துளைத்துச் சென்று அங்குள்ள காமதேனுவின் மடித்தலத்தையும் முட்டியது.  அதனால் அதன் மடித்தலம் குழைந்தது.  வரால் முட்டியதால் முலைக் காம்புகள் துவாரம் கொண்டு அவற்றின் மூலம் பால் பெருகலாயிற்று.  அந்தப் பால், ஆற்றில் பெருகியதால் !  பாலாறு என்ற பெயர் அழியாதவாறு புதுக்கப்பட்ட நிலையினை அவ்வாறு பெற்றது.  இவ்வளவும் உயர்வு நவிற்சியணியும் தற்குறிப்பு ஏற்ற அணியும் ஆகும்.  முட்டுபு என்பது செய்பு என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்.  காமதேனுவின் மடித்தலத்தை வரால் முட்டியதும், காமதேனு தன் கன்று தான் முட்டியதே என்று மகிழ்ந்து பாலைச் சுரக்கத் தொடங்கிவிட்டது.  வரால் முட்டினால் கறவைகள் தம் கன்றுதான் முட்டியது என்று பாலைச் சுரத்தல் இயற்கை.  இதனை, “மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று வீட்டளவும் பால் சொரியும் வெண்ணெயே” என்ற கம்பர் வாக்காலும் உணரலாம்.  வரால் முட்டியதும் ஆண்டு நில்லாது கீழ் இறங்கிவிட்டமையின், காமதேனு, முட்டிய தன் கன்று எங்கே என்று தேடத் தொடங்கியது.  மழஇளம் என்பது ஒரு பொருட் பன்மொழி எனப்படும்.  மீமிசைச் சொல் எனினும் அமையும்.  அப்பசு என காம