New Page 1
குட்பட்டது. அவன் மூர்த்தியார்க்குத்
தீங்கு இழைத்தனன் என்றாலும், தம் தொண்டினை விட்டிலர். சந்தனக்கட்டை எங்கும் கிடைக்கா
வண்ணம் அரசன் செய்தான். மூர்த்தியார் தம் முழங்கையைச் சந்தனக் கல்லில் தேய்த்தார்.
அதனால் செந்நீர் பெருக்கெடுத்தது. அந்நிலையிலும் விடாது தேய்த்த போது, இறைவர் அசரீரியாக,”
“ அன்ப உன் அன்பை மெச்சினோம். தேய்த்தலை நிறுத்துக. நீயே அரசனாகும் வாய்ப்பு
அளிப்போம்” என்றுகூற மூர்த்தியார் கையும் செம்மையுற்றது. மன்னன் இறந்தான். அமைச்சர்கள்
நாட்டிற்கு அரசனை அமைக்க யானையைக் கண்கட்டி ஏவி, அதுகொண்டு வருபவரை அரசனாக்கத் தீர்மானித்தனர்.
யானை மூர்த்தியாரைக் கொணர்ந்தது. அவர் அமைச்சர்களிடம்” தமக்குத் திருநீறு அபிடேகமாகவும்,
உருத்திராக்கம் ஆபரணமாகவும், சடை முடியாகவும் இருந்தால்தான் அரசை ஏற்பேன்” என அவ்வாறே அவர்கள்
இசைய, இம்முப்பொருளை ஏற்று அரசு செய்து, சைவம் ஓங்கச் செய்தார். இதனால் “மும்மையால் உலகாண்ட
மூர்த்தியார்” எனச் சிறப்பிக்கப்பட்டார்.
முருக நாயனார் சோழநாட்டுத்
திருப்புகலூரில் வேதியர் குலத்தில் பிறந்தவர். சிவபக்தி அடியார். பக்தியுடையவர். இவர்
மலர்மாலை கட்டிச்சாத்தி இறைவனை வழிப்பட்டவர். திருஞானசம்பந்தருடன் இவரும் இறைவன் திருவடியில்
கலந்தனர்.
உருத்திரபசுபதியார்
சோழநாட்டுத் திருத்தலைப்பதியில் வேதியர் குலத்தில் பிறந்தவர். இவரது பெயர் பசுபதி என்பது.
இவர் தாமரைக் குளத்தில் இறங்கி, ஸ்ரீ உருத்திரத்தை ஓதுவார். ஆகவே, உருத்திர பசுபதியார் எனப்பட்டார்.
திருநாளைப்
போவார் சோழநாட்டில் மேற்கா நாட்டின் ஆதனூரில் ஆதித்திராவிட மரபில் தோன்றியவர். இவரது
இயற்பெயர் நந்தனார் என்பது. சிவபக்தி மிக்கவர். கோயில் இசைக் கருவிகளுக்கு வார், தோல்,
இவற்றைத் தரும்
|