குமரகுருபரர் வராலின்
செயலை,
கரும்பொன் தொடிக்கடைசீ
மெல்லியர் வெரீஇப்
பெயரவான்
மீன்கணம்
வெருக்கொள்ள
வெடிவரால் குதிகொள்ளும்
என்றனர். இதுவே அன்றி,
மற்றும் பல மீன் இனங்களின் தன்மைகளையும் குமர குருபரர்,
முத்துக்குமாரசாமி
பிள்ளைத் தமிழில்,
மடுவில் வெடிபோம்
வரிவாளை
பண்ணத்திருள்
தூங் கழுவநீர்ப்
பரப்பு என்று அகல்வான்
மிசைத்தாவ
என்றும்,
பெருங்கற் பகத்தின்
கழுத்தொடிய
பிறழும்
வாளைப் பகடுதைத்த
தென்னம் பழம்வீழ்
சோணாடர்
என்றும் பாடி, நாட்டின்
நீர்வளத்தைக் கூறி இருத்தல் காண்க.
வெள்ளத்தில் யானைகளும்
உருண்டு வருதலைக் கம்பர்
பணைமு கக்களி யானைபல்
மாக்களோ
டணிவ குத்தென ஈர்த்திரைத்
தரர்த்தலின்
மணியு டைக்கொடி முந்தவந்
தூன்றலால்
புணரி மேல்பொரப்
போவது போன்றதே
என்றனர்.
(49)