ம
மாலைவாய் உகுத்த
தேனும்
வரம்பிகந் தோடி
வங்க
வேலைவாய் மடுப்ப
உண்டு
மீனெலாம்
களிக்கும் மாதோ
என்று பாடியுள்ளனர்.
பாங்குபடு செல்வமென்பால்
(மருத நிலம்) என்பது உண்மை என்பதைச் சேக்கிழார் மருதவளம் பாடும் இடத்துப் பாங்குற மொழிந்துள்ளனர்.
ஓங்கு செந்நெலின்
புடையன உயர்கழைக் கரும்பு
பூங்க ரும்பயல் மிடைவன
பூகம்அம் பூகப்
பாங்கு நீள்குலைத் தெங்குபைங்
கதலிவண் பலவு
தூங்கு தீங்கனிச்
சூதநீள் வேலிய சோலை
நீடு தண்பணை உடுத்தநீள்
மருங்கின் நெல்லின்
கூடு துன்றிய இருக்கைய
விருந்தெதிர் கொள்ளும்
பீடு தங்கிய
பெருங்குடி மனையறம் பிறங்கும்
மாடம் ஓங்கிய மறுகன
மல்லல்மூ தூர்கள்
தொல்லை நான்மறை முதல்பெருங்
கலைஒலி துவன்றி
இல்ல றம்புரிந் தாகுதி
வேள்வியில் எழுந்த
மல்கு தண்புகை மழைதரு
முகில்குலம் பரப்பும்
செல்வம் ஓங்கிய திருமறை
யவர்செழும்பதிகள்
என்பன போன்ற பாடல்களைக்
காண்க.
உவரிநீர் கருப்பஞ்
சாற்றால் இனிமையுற்றது என்று ஈண்டுக் கூறியதுபோல, குமர குருபரர் கற்பகத்தின் தேன் கலந்து கழனி
தெய்வமணம் கமழ்ந்தது என்பதை அழகுபட அறிவித்ததையும் படித்தல் சுவை தருவதாகும். அப்பாடல்,
கோடுபடு கொங்கைக்
குவட்டுக் கிளைத்திட்ட
கொடிஇடைக்
கடைசியர் குழாம்
குரவைஇடு துழனியில்
கொண்டல்திரை யத்தாவும்
குழவுப்பகட்டு
வாளை
|