பக்கம் எண் :

New Page 1

 

        முத்தப் பருவம்

475

    சேடுபடு புத்தேள் நிலத்துப் புனிற்றிளம்
        சேதா வயிற்று முட்டச்
    சேங்கன் றெனத்தடவு மடிமடை திறந்துற்று
        தம்பால் சினைக்கற் பகத்
    தேடுபடு தடமலர்த் தேன்அருவி யொடுசொரி
        தேரியொடு கால்நிரம்ப
    இழுதுபடு கழனியும் தெய்வ மணம் நாறஏன்
        றின்சுவை முதிர்ந்து விளையும்
    காடுபடு செந்நெல்பைங் கன்னல்நிகர் பூள்ளூர
        கனிவாய் முத்தம் அருளே
    கங்கைக்கு நெடியவன் தங்கைக்கும் ஒருமகன்
        கனிவாய் முத்தம் அருளே

என்பது.

    எருமைகளின் தன்மை பற்றி ஈண்டுக் குறித்தது போலக் குமர குருபரர் தம் திருவாரூர் நான்மணி மாலையில் தமிழிலும்,

    கருந்தாது கடுத்த பெரும்பணை தாங்கும்
    படாமருப் பெருமைபெங் குவளை குதட்டி
    மடிமடை திறந்து வழிந்த பாலருவி
    கரைபொரு தலைப்பப் பெருபூந் தடத்து

என்றும், முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழில்,

    பானாறு செந்நெல் பசுங்கதிர் கறித்துமென்
        பைங்குவளை வாய்குதட்டும்
    பணைமருப் பெருமைமடு மடிமடை திறந்ததீம்
        பால்ஆறு பங்கயச்செந்
    தேனாறு டன்கடவுள் வானா றெனப்பெருகும்

என்றும் பாடி இருத்தல் காண்க.                              

(50)