பக்கம் எண் :

பூண

 

        முத்தப் பருவம்

477

    பூணாள் திருமுகத்தைப் புண்டரீகம் என்று அயர்த்துக்
   
காணாது அயர்வானைக் காண்

என்பர் புகழேந்தியார்.

தாளையேய் கமலத் தாளின் மார்புறத் தழுவு வாரும்
தோளையே பற்றிவெற்றித் திருவெனத் தோற்று வாரும்
பாளையே விரிந்த தென்னப் பந்துநீ ருந்து வாரும்
வாளைமீன் உகள அஞ்சி மைந்தரைத் தழுவு வாரும்

என்பர் கம்பர்.

    ஏந்திழை மகளீர் தாமும் மைந்தரும் இருநீர் தன்னுள்
    பாய்ந்தனர் ஆடும் எல்லை

என்பர் கச்சியப்ப சிவாசாரியார்.

    ஆகவே,  “நீளைநீர்  மாதரொடு  காளைநேர்  மைந்தர்  நெருங்கி  விளையாடுபால்” என்றனர்.  ஆண்களும் பெண்களும் குழுமிப் பூக்கொய்தும் இன்புற்றனர் என்பதை,

    கொய்த மலரைக் கொடுங்கையி னால்அணைத்து
    மொய்குழலில் சூட்டுவான் முன்வந்து-தையலாள்
    பாதார விந்தத்தே சூட்டினான் பாவைனின் இடைக்கு
    ஆதாரம் இன்மை அறிந்து

எனப் புகழேந்தியார் பாடினர்.

போரன்ன வீங்கும் பொருப்பன்ன பொலங்கொள்
                                       ( திண்தோள்
மாரன் அனையான் மலர்கொய் திருந்தாளை வந்தோர்
காரன்ன கூந்தற் குயிலன் னவள்கண் புதைப்ப
ஆரென்ன லோடும் அனல்என்ன வெதும்பு கின்றாள்

எனப்பாடினர் கம்பர்.

    அங்கொ ருத்தியை நோக்கியோர் அண்ணல்உன்
    கொங்கை ஒத்திடாக் கோங்கலர் கொள்கென
    எங்கை தன்முலைக் கொப்பதென்று எணணி்யோ
    செங்கை யாற்பறித் தீர்என்று சீறினாள்

என்ற கவியைப் பாடினர் கச்சியப்பர்.

    குளங்களில் வாளை எழலை முன்பும் கண்டனம்.  சம்பந்தரும் நீர் நிலைகளில் மீன் பாய்தலை, “வரிகெண்டை பாய”