பக்கம் எண் :

 

        முத்தப் பருவம்

479

    விண்ணறா மதிமுயல் கலைகிழிந்து இழிஅமுத
        வெள்ளருவி பாயவெடி போய்
    மீளும் தகட்டகட் டிளவாளை மோதமுகை
        விண்டொழுகுமுண்டகப்பூந், தெண்ணாறா அருவியாய

என்றும்,

    மீத்தந்த மாகத்து மேகத்தி
        னோடுமூடு மீன்இரியல் போகவுகளும்
    வெடிவாளை மதிஅகடு உடைத்தூற்று
        தெள்ளமுத வெள்ளருவி

என்றும்,

    குரவையிடு துழனியில் கொண்டல்திரை யத்தாவு
        குழவுப் பகட்டுவாளை
    சேடுபடு புத்தேள் நிலத்துப் புனிற்றிளம்
        சேதா வயிற்றுமுட்டச்
    சேங்கன் றெனத் தடவு மடிமடை திறந்தூற்று
        தீம்பால் சினைக்கற்பகத்
    தேடுபடு தடமலர்த் தேன்அருவி யொடுசொரிந்து
        ஏரியொடு கால்நிரம்ப
    இழுதுபடு கழனியும் தெய்வமணம் நாறஏன்று
        இன்சுவை முதிர்ந்து விளையும்

என்றும், வாளைமீன்களின் அட்டகாசங்களைக் குமரகுருபரர் பாடியிருப்பதைக் காண்க.

    இவ்வாறே எருமைகளின் செயல்களையும்,

        தென்னம் தமிழின் உடன்பிறந்த
            சிறுகால் அரும்பத் தீங்கரும்பும்
        தேமா நிழற்கண் துஞ்சும்இளம்
            செங்கண் கயவாய்ப் புனிற்றெருமை
        இன்னம் பசும்புல் கறிக்கல்லா
            இளங்கன்று உள்ளிமடித் தலம்நின்று
        இழிபால் அருவி உவட்டெறிய
            எறியும் திரைத்தீம் புனல்பொய்கை

என்றும் பாடியுள்ளனர்.                                       

(51)