New Page 1
கைகள் கூப்பித் தொழுதெழுந்
தத்திசை
மெய்யில் ஆனந்த
வாரி விரவிடச்
செய்ய நீள்சடை
மாமுனி செல்வுழி
ஐயம் நீங்க
வினவுவோர் அந்தணர்
சம்பு வின்அடித் தாமரைப்
போதலால்
எம்பி ரான்இறைஞ்
சாய்இஃ தென்எனத்
தம்பி ரானைத்தன்
உள்ளம் தழீஇயவன்
நம்பி ஆரூரன் நாம்தொழும்
தன்மையன்
எனவரும் தம்வாக்குகளால்
தெரிவிக்கின்றனர்.
நம்பி ஆரூரரும்,
இந்திரன் மால்பிரமன்
எழிலார் மிகுதேவர் எல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை
மத்தயானை அருள்புரிந்து
மந்திர மாமுனிவர்
இவன்யா ரெனஎம் பெருமான்
நந்தம் ஆரூரன் என்றான்
நெர்டித்தான்மலை உத்தமனே
என்று பாடிய திருப்பாட்டாலும்
தெளியலாம்.
சேக்கிழார்
பெருமானார்க்கு அடியார் புகழை அறிவிப்பதில் பெருவிருப்பம் உண்டு என்பதைச் சேக்கிழார்
வாக்கே தெரிவிக்கும்.
அளவி லாத
பெருமையர் ஆகிய
அளவி லாஅடி
யார்புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்பரி
தாயினும்
அளவில் ஆசை துரப்ப
அறைகுவேன்
என்ற இடத்துப் புலனாதல்
காண்க.
இதனால் “கீர்த்தி ***
எழுகுறுமுறுவல்” எனப்பட்டது.
சேக்கிழார் திருவடிகளை
அன்பர்கள் தம் இதயத்து வைத்துப் பூசித்துப் போற்றியதை முன்பு கண்டனம். ஆண்டுக் காண்க.
“சைவத்தின்மேற்
சமயம் வேறில்லை. அதில் சார் சிவமாம் தெய்வத்தின்மேற் தெய்வம் இல்லை’ என்றும், “சைவ
சமயமே சமயம்” என்றும் அனுபவ ஞானிகள் கூறுவதால்
|