அஃ
அஃது உயர் சைவமாயிற்று.
சேவையர் என்பார் வேளாளர். இவர்கள் சேவை (காளைகளை) வைத்திருப்பதால் இப்பெயர்க்கு உரியர்
ஆயினர். அவர்கள் கொடை, கொண்டல் போன்று கைம்மாறு வேண்டாது ஈயும் தன்மையது. கம்பர்
இதனை உணர்ந்து,
செட்டிமக்கள் வாசல்வழி
செல்லோமே செக்காரப்
பொட்டிமக்கள் வாசல்வழிப்
போகோமே-முட்டிப்புகும்
பார்ப்பார் அகத்தைஎட்டிப்
பாரோமே எந்நாளும்
காப்பாரே வேளாளர் காண்
என்றதாலும்,
மேழி பிடிக்கும்கை
வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழி திருத்தி
அருளும்கை-சூழ்வினையை
நீக்கும்கை என்றும்
நிலைக்கும் கைநீடூழி
காக்கும்கை
காராளர் கை
என்றதனாலும்,
“வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்” என்பதாலும் அவர்கள் கரதலம் கொண்டல்நிகர்
கரதலமாயிற்று. வேளாளர்கள் பிறர்க்குக் கொடுக்கக் கற்றவர்களே அன்றி, வாங்கக் கற்றவர்
அல்லர் என்ற அரிய குறிப்பைக் கற்பனைக் களஞ்சியமாம் சிவப்பிரகாசரும் அப்பரை நோக்கி,
கொள்ளைக்கதிர் முத்தின்
பந்தரும் சின்னமும் கொள்ளும் ஒரு
பிள்ளைக் கதுதகும் நாவர
சாய பெருந்தகையோய்
கள்ளைக் குவளை உமிழ்வீழி
யில்படிக் காசுஒன்றுநீ
வள்ளைக் குழைஉமை பங்காளர்
கையில்என் வாங்கினையே
என்று கூறினார்.
தேசி லங்குமுகில்
குன்றை யாதிபதி
தொண்டர்
சீர்பரவு சேக்கிழார்
வாசல் அன்றுமுதல்
இன்று காறும்இனி
மேலும் வாழையடி
வாழையாய்
|