பக்கம் எண் :

New Page 1

 

       காப்புப் பருவம்

49

முயன்றார்.  அதுபோது அக்கல்லிலிருந்து ஒரு கைதோன்றி அவரை மொத்துண்ணாவாறு செய்தது. இதற்கிடையில் இறைவரும் காட்சிதந்து திருவருள் புரிந்தார்,

    சண்டேசுவரர் சோழநாட்டுத் திருச்சேய்ஞ்ஞலூரில் வேதியர் மரபில் தோன்றினார்.  இவரது தந்தை எச்சதத்தன் என்பவன்.  நாயனாரது இயற்பெயர் விசார சருமர் என்பது. அவ்வூரில் பசக்களை மேய்க்கும் இடையன், பசுக்களை அடிப்பதைக் கண்டு, தாமே அவற்றை நன்முறையில் மேய்க்கலாயினர்.

    விசாரசருமர் மண்ணியாற்றங்கரையில் பசுக்களை மேய்த்து நீர்பருகச் செய்து வந்தார்.  இவர் அவ்வாற்றங்கரையில் ஆத்திமரத்தடியில் மண்ணால் சிவலிங்கம் அமைத்துப் பசுக்கள் தாமாகச் சொரிந்த பாலை அபிஷேகம் செய்து, சிவபூசை பண்ணிவந்தனர்.  இதனை ஒருவன் திருச்சேய்ஞ்ஞலூரார்க்கு அறிவித்தனன்.  தந்தை எச்சதத்தன் நேரேவந்து கண்டபோது, வெகுண்டு பூசைக்கு அமைந்த பாற்குடத்தைக் காலால்உதைத்தான்.  விசாரசருமர், சிவபூசைக்குத் தீங்கிழைத்த தந்தையின்காலைப் பக்கத்தில் இருந்த கழிகொண்டு வெட்ட, அது மழுவாக மாறி இருதுண்டாக்கியது. இறைவர், விசாரசர்மர் சிவபூசையினிடத்துக் கொண்ட பற்றைக் கண்டு காட்சி அளித்து, “இனி உனக்கு யாமே தந்தை.  மேலும், உனக்குச் சண்டேசுர பதமும் தந்தோம்” என்று அருளிக் கொன்றை மாலையைத் தலையி்ல் சூட்டிமறைந்தார் அன்று முதல் சண்டேசுவரர் எனப்பட்டார்.  இக்காட்சியைச் சிற்ப வடிவில் கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்றும் காணலாம்.

    “ஒண்பொருள்” என்பது ஈண்டுப் புத்திரர் என்னும் பொருளது.  அப்புத்திரர் திருஞான சம்பந்தர்.  அவர் சிவபாத இருதயர் திருமகனார்.  திருஞானசம்பந்தர் நம் மனோர்க்குத் திருவருள் பாலித்தவர்.  சம்பந்தர் காலத்தில் சைவம் குன்றிச் சமணம் ஓங்கி இருந்தது.  அதன் பொருட்டுச் சிவபாத இருதயர் துன்புற்று இறைவரை வேண்டிப்பரசமயத்தை ஒழிக்கும் புதல்வர் பேற்றை விரும்பினார்.  இதனைச் சேக்கிழார்.