New Page 1
கோதைவேல் மன்னரவர்தம்
குடைவளமும்
கொழுவளமே
ஆதலால் இவர்பெருமை
யார்உரைக்க
வல்லாரே
என்று எடுத்து இயம்புகிறது.
இதனால், “நீடும் கொழு” என்றது பொருத்தம் அன்றோ?
இல்லக் கிழத்தியர்களே
குடும்பத்திற்குச் சிறப்புத் தருபவர்கள் ; அவர்களால்தான் குடி பெருகும். இது குறித்தே இவர்களை
வாழ்க்கைத் துனைவியர் என்றனர் வள்ளுவர். இவற்றையெல்லாம் உட்கொண்டே, “மனை உதவியால்
நனி நிரம்பப் பெருக்கு குடி” எனப்பட்டது. தம் அனை உதவியால் என்று பிரித்துத் தமது தேவியாம்
உமை அம்மை என்று பொருள் கூறினும் பொருத்தமே. பெருக்கு குடி என்னும் தொடர்க்கு கூடல்கிழான்
குடி, புரிசைகிழான் குடி, குளப்பாக்கிழான் குடி, குளத்துழான் குடி போன்ற குடிகள் எனினும் ஆம்,
இக்கருத்துக்களையே,
“வாங்கி *** பெருக்கும் குடி” என்றனர். குடி என்றது பொதுப்பட வேளாளர் குடி ஆகும். செறியும்
ஒரு குடி என்றது சேக்கிழார் குடியாகும். சேவையர் குடி என்பது பொதுவாக வேளாளர் குடியைக்
குறிக்கும். தொண்டு செய்வதே தமது குறிக்கோளாகக் கொண்ட வேளாளர் குடி ஆதலின், சேவையர் குடி
என்றனர். அக்குடியில் சேக்கிழார் தலைமை வகித்தமையின், “சேவையர் குலாதிபதி” என்றனர்.
குல+ அதிபன் என்ற சொற்கள் சேர்ந்தே குலாதிபன் என்று ஆயது.
(93)
|