அங
அங்கவள் உருவம் காண்பார்
அதிசயம் மிகவும்எய்திப்
பங்கமுற் றாரே
போன்றார் பரசமயத் தில்உள்ளோர்
எங்குள செய்கை தான்மற்
றென்செய்த வாறிதென்று
சங்கையாம் உணர்வு
கொள்ளும் சமணர்தள் ளாடி
( வீழ்ந்தார்
என்றும் பாடிய ஆற்றால்
அறியலாம்.
(53)
3. நீடும்இன் பரிவையர்
புணர்ப்பென்ம ரும்ஐந்து
நிகழ்கந்த
மும்கெடுதலே
நிலவும்இன் பென்மரும்
குணம்மூன்றும் ஒழிதலே
நிரம்பல்உறும்
இன்பென்மரும்
நாடும்இன்
பிருவினைக் கேடென்ம ரும்மலம்
நசித்தலே இன்பென்மரும்
நவில்விக்கி
ரகநித்தம் இன்பென்ம ரும்தோன்றும்
ஞானமே இன்பென்மரும்
பாடும்இன்
புயிர்கெடுதல் என்மரும் பகுதிமேல்
கெடுதலே இன்பென்மரும்
படுசித்தி இன்பென்ம
ரும்பிறரும் வாதம்
படர்ந்துவரு திறன்அறவளம்
கூடுசெந் தமிழ்அருமை
அறிபெருஞ் சேவையார்
குலசிகா மணிவருகவே
கொன்றைச் சடாடவியர்
மன்றைப் பராவியெழு
குன்றைப்
பிரான்வருகவே
[அ. சொ.]
இன்பு-இன்பம், முத்தி, அரிவையர்-மாதர்களது, புணர்ப்பு-புணர்ச்சி இன்பம், என்மரும்-என்று
சொல்பவரும், ஐந்துநிகழ் கந்தம்-பஞ்சகந்தம், ஸ்கந்தம்-கூட்டம், குணம் மூன்று-ராஜச, தாமச,
சாத்வீக குணங்கள், இருவினை கேடு-நல்வினை தீவினைகள் இரண்டும் கெடுதலே, மலம்-ஆணவம், கன்மம்
மாயை என்னும் மூன்று மலங்களும், நசித்தலே-ஒழித்தலே, நவில்-கூறப்படுகின்ற, விக்கிரக நித்தம்-உடல்
அழியாதிருத்தல், பாடும்-உண்டாகும்
|