New Page 1
“உரன்என்னும் தோட்டியால்
ஓர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்புக்கோர்
வித்து”
என்றும்,
அடல்வேண்டும் ஐந்தின்
புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம்
ஒருங்கு
என்றும் திருக்குறள்
கூறுவதால் ஐந்து நிகழ் கந்தம் கெடுதல் வேண்டும் என்பது பெற்றாம்.
மேலும், இவ்வைந்து
கந்தங்களைப் பகுத்துப் பகுத்துக் கூறத் தொடங்கின் கீழ் வருமாறு பகுக்கப்படும். அவை, உருவம்,
வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம் எனப்படும். இவற்றுள் உருவக் கந்தம் பூத உரு, உபாதாய உரு
என இருவகைப்படும். பூத உரு மண், நீர், தீ, காற்று என்னும் நான்காகும். வேதணைக் கந்தம், குசல
வேதனை (சுக அறிவு) அகுசல வேதனை (துக்க அறிவு) குசலா குசல வேதனை (சுக துக்க அறிவு) என்றும்
மூவகையாகும். குறிப்புக் கந்தம், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தும் மனம் ஒன்றும்
ஆகிய ஆறும் ஆகும். பாவனைக் கந்தம் மனோவாக்குக் காயங்களினால் உண்டாகும் புண்ணிய பாவங்களாகும்.
விஞ்ஞான கந்தமாவது, மேலே கூறப்பட்ட உருவம், வேதனை, குறிப்பு, பாவனை ஆகிய இந்நான்கு கந்தங்களின்
உண்மை நிலையை அறியும் அறிவாகும். இந்தப் பஞ்ச கந்தங்களும் கெடுதல் முத்தி இன்பம் என்பவர்கள்
பௌத்தரில் சௌத்திராந்திகர். இவர்கள் மதக் கொள்கையினைச் சிவஞான சித்தியார் பரபக்கம்,
ஓங்கிய உருவ
மோடும் வேதனை குறிப்பி னோடும்
தாங்குபா வனைவிஞ்
ஞானம் தாம்இவை ஐந்தும்கூறி
பாங்கினால் சந்தா
னத்தில் கெடுவது பந்த துக்கம்
ஆங்கவை பொன்றக்
கேடாய் அழிவது முத்திஇன்பம்
எனக் கூறுகிறது.
மூக்குணமாகிய ராஜச
தாமச சாத்வீகங்களும் கெடுதல் இன்பம் என்பவர்கள் நிர்க்குணவாதிகள். இவர்களைச்
|