உய
உயிர் கெடுதல் இன்பம் என்பவர், பாற்கரிய மதத்தர். இவர்களது இயல்பைச் சித்தியார்
பரபக்கம்.
சித்தே உலகாய்ப்
பரிணமித்துச்
சீவன் ஆகித்
திகழ்ந்தமையால்
சத்தே எல்லாம்
முத்தியினைச்
சாரக் கண்ட
ஞானங்கள்
வைத்தே
மொழியும் மாமறைகள்
சொன்ன மரபே
வந்தக்கால்
ஒத்தே கெட்டுப்
பிரமத்தோ
டொன்றாய்ப்
போமென் றுரைத்தனனே
என்கிறது.
பகுதிமேற் கெடுதல்
இன்பம் என்பவர் பாடாணவாத சைவர். இவர்களது கொள்கை ஆன்மா ஒன்றும் விளங்குதல் இன்றிக்
கல்லு போல் கிடப்பதே முத்தி என்பது.
இன்னோரன்ன அரிய
குறிப்புக்களைப் புகுத்தி வைத்த திரு. பிள்ளை அவர்களின் சைவசித்தாந்தப் பேரறிவுத் திறனை
என்னென்று போற்றுவது !
மேலே காட்டிய
விளக்கமே அன்றிக் கீழ்வருமாறு விளக்கம் காட்டினும் இழுக்காது.
குணரகிதராக இருப்பதே
இன்பம். சத்வக் குணமும் கெடுதல் எனக் கூறிய தன் கருத்து அதுவும் பிறவிக்கு ஏதுவாதலின் என்க.
நல்வினை தீவினை இரண்டும் கெடுதலே இன்பம். இதனை “இருமைவகை தெரிந்து” என்றும் குறட்குப் பரிமேலழகர்
எழுதிய விளக்கத்தால் அறியலாம். அவர், “நல்வினையும் பிறவிக்கு ஏதுவாதலின், அதுவும் இருள்சேர்
வினை” என்று அடைகொடுத்துப் பேசியதாக எழுதியுள்ளார். இது போன்றதே சாத்வீகக் குணமும் கெடுதல்
வேண்டும் என்பது. மலம் ஒழிதல் இன்பத்திற்கு ஏது எனக் கூறவேண்டுவதில்லை. இம்மலத்தின்
கொடுமையினைச் சித்தியார்,
|