பக்கம் எண் :

New Page 1

 

       வாரானைப் பருவம்

499

மும்மலம் நெல்லினுக்கு முளையொடு தவிடு மிபோல்  
மம்மர்செய் தணுவிள் உண்மை வடிவினை மறைத்து நின்று
பொய்ம்மைசெய் போக பந்த போத்திருத்து வங்கள்
                                        பண்ணும்

என்று அதன் கொடுமையினை கூறுகின்றது. “உயர்சிவ ஞானத்தாலே போழிளமதி யினானைப் போற்றுவார் அருள் பெற்றாரே” போக்குவார் என்றும் கூறி, அதனைப் போக்கும் வழியைக் காட்டியது.  ஆகவே, மலம் நசித்தல் இன்பம் ஆயிற்று.

    மலம் நலிந்தால் இன்பம் உண்டு என்பதை,

    செம்மைநலம் அறியாத சிதடரொடும் திரிவேனை
    மும்மைமலம் அறிவித்து முதலாய முதல்வன்தாள்
    நம்மையும்ஓர் பொருளாக்கி  நாய்சிவிகை ஏற்றுவித்த
    அம்மைஎனக் கருளிய வாறுஆர் பெறுவார் அச்சோவே

எனும் மணிமொழியார் வாக்கால் தெளிக.

    உடலை அழியாது வைத்திருத்தல் இன்பம் என்பதைத் திருமூலர் கூறுமாற்றால் உணரலாம்.

    உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
    திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே

    உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
    உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
    உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
    உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே

என்பனவற்றைக் காணவும்.

    ஞானமே இன்பு என்பர் என்பதை அப்பர் வாக்கு அறியுறுத்தும்.

    ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள்
    ஞானத் தால்தொழு வேன்உனை நான் அலேன்
    ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு
    ஞானத் தால்உனை நானும் தொழுவனே