ம
மனைஅறத்தில் இன்பமுறும்
மகப்பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலைநின்றே
ஆடியசே வடிக்கமலம் புரிந்தார்
நினைவுறமுன் பரசமயம் நிராகரித்து
நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப்
பெறப்போற்றும் தவம்
அருக்கன்முதல் கோள்அனைத்தும்
அழகியஉச் சங்களில்
பெருக்கவலி யுடன்நிற்கப்
பேணியநல் ஓரைஎழத்
திருக்கிளரும் ஆதிரைநாள்
திசைவிளங்கப் பரசமயத்
தருக்கொழியச் சைவமுதல்
வைதிகமும் தழைத்தோங்க
திசைஅனைத்தின்
பெருமைஎலாம்
தென்திசையே
வென்றேற
மிசைஉலகும் பிறஉலகும்
மேதினியே தனிவெல்ல
அசைவில்செழும்
தமிழ்வழக்கே
அயல்வழக்கின்
துறைவெல்ல
இசைமுழுதும் மெய்யறிவும்
இடம்கொள்ளும்
நிலைபெருக
அவம்பெருக்கும்
புல்லறிவின்
அமண்முதலாம்
பரசமயம்
பவம்பெருக்கும்
புரைநெறிகள்
பாழ்படநல்
ஊழிதொறும்
தவம்பெருக்கும்
சண்பையிலே
தாவில்சரா
சரங்கள்எலாம்
சிவம்பெருக்கும்
பி்ள்ளையார்
திருவவதா ரம்செய்தார்.
என்று குறிப்பிடுதல் காண்க.
இன்னோரன்ன காரணங்களால்
சிவபாத இருதயர் மகிழ்ந்தனர். ஆதலின், “சிவபாத இருதயர் உளத்துவகை நண்ண” என்றார்.
பொருள் என்பது பெற்றெடுக்கும் பிள்ளைகளைக் குறிக்கம் என்பதை, “பொருளோடு புணர்ந்த பக்கம்”எனத்
தொல்காப்பியத்தும், “ தம் பொருள் என்ப தம்மக்கள்” எனத் திருக்குறளிலும், “ ஒண்பொருளும்
நீ” என அப்பர் பெருமானார் வாக்கிலும் அறியவருவதை அறியவும். ஆகவே, ஒண் பொருள் ஆதலால்
எனப்பட்டது.
|