பக்கம் எண் :

என

 

       வாரானைப் பருவம்

503

என்று சீகாளத்திப் புராணமும் கூறிதலைக் காணவும்.  இங்ஙனம் எல்லாம் விளங்குதற்கு வளம் இருந்தால் அன்றி இயலுமோ?

    தமிழின் பெருமையினைச் சேக்கிழார் நன்கு அறிந்தவர்  என்பதில்   சிறிதும்  ஐயம் இல்லை.    காரணம்  அவர்  தமிழைப்  பற்றிக்  கூறும்போதெல்லாம்,  “ஞாலம் அளந்த  மேன்மைத் தெய்வத் தமிழும்” என்றும்.  “சால்பாய மும்மைத் தமிழ் என்றும், “விரும்பும் தமிழ்” என்றும், “வசையில் செழும் தமிழ்” என்றும், “பரவுசொல் தமிழ்” என்றும், “தூக்குஇன் தமிழ்” என்றும், “உயர் தமிழ்” என்றும், “அருஞானச் செந்தமிழ்” என்றும் தமிழின் அருமை அறிந்து செப்பிய இடங்கள் பல ஆதலின், “தமிழ் அருமை அறிசிகாமணி” எனப்பட்டார்.  இப்பாட்டில் கூறப்பட்ட சைவசித்தாந்த விளக்கங்களை மேலும் காண விழைவார் சிவஞான மாபாடியத்துள் காணவும்.

    சிவப்பிரகாசத்தில் உமாபதி சிவாசாரியார்,

    அரிவையரின் புறுமுத்தி கந்தம் ஐந்தும்
    அறுமுத்தி திரிகுணமும் அடங்கு முத்தி
    விரிவுவினை கெடுமுத்தி மலம்போம் முத்தி
    விக்கிரக நித்தமுத்தி விவேக முத்தி
    பரவுமுயிர் கெடுமுத்தி சித்தி முத்தி
    பாடாண முத்திஇவை பழிசேர் முத்தி
    திரிமலமும் அகலவுயிர் அருள்சேர் முத்தி
    திகழ்முத்தி இதுமுத்தித் திறத்த தாமே

என்று கூறி இருப்பதை ஈண்டு நினைவு கொள்வோமாக.         

(54)