4
4. செற்றசெங் கன்னல்படு
தரளமும் கந்திச்
செழுஞ்சோலை
படுதரளமும்
திண்மருப் புக்கடாக்
களிறுமறை யப்போய
செஞ்சாலி
படுதரளமும்
துற்றபைங் கதலியில்
படுதரள மும்பாலி
துறைதொறும்
எடுத்துவீசுஞ்
சுடர்மணிக ளுங்கரும
நடவுவோர் வாருபு
சுமந்துகொடு வந்துதூய
முற்றமெங் கணுநிறை
தாக்குவித் திடல்கண்டு
மோகமுற்
றோடிஆடி
முகந்திடறி ஏற்றியொன்
றாக்கிவிளை யாடுசிறு
முண்டகத் தாள்பெயர்த்துக்
கொற்றவன்
தருமுதன்மை கொண்டுமிளிர் சேவையார்
குலசிகா மணிவருகவே
கொன்றைச் சடாடவியர்
மன்றைப் பராவியெழு
குன்றைப்
பிரான்வருகவே.
[அ. சொ.]
செற்ற-நெருங்கிய, கன்னல்-கரும்பு, படு-தோன்றுகின்ற, தரளம்-முத்து, கந்தி-பாக்கு மரம், திண்மருப்பு-வன்மைமிக்க
தந்தம், கடாக்களிறு-மதசலம் ஒழுக்கும் யானை, போய-மிகவளர்ந்த, செஞ்சாலி-செந்நெற் கதிர்,
துற்ற-நெருங்கிவளர்ந்த, கதலியில், வாழையில், பாலி-பாலாறு, துறை-கரைதோறும், கருமம்
நடவுவோர்-வயலில் வேலை செய்பவர், சுடர்மணி-ஒளிவிடும் முத்து, வாருபு- வாரிக்கொண்டு, தூய-சுத்தமான,
மோகமுற்று-ஆசை கொண்டு, ஏற்றி-உதைத்து, முண்டகத்தாள்-தாமரைப் பாதம், கொற்றவன்-அனபாய
சோழமன்னன், முதன்மை-முதல் அமைச்சர் பதவி, மிளிர்-உத்தமசோழ பல்லவன் என்னும் பெயருடன்
விளங்கும்.
விளக்கம் : இப்பாடல்
மூலம் முத்துக்கள் தோன்றும் இடங்களை அறியலாம். முத்துக்கள், கரும்பு, பாக்கு மரம்
|