New Page 1
டுழுத பொலன்சீ
றடிக்குடைந்த
செந்தா
மரையும் பசுங்கழுத்துக்
குடைந்த கமஞ்சூல்
சங்கும்ஒழு
கொளிய
கமுகும் அழகுதொய்யில்
எழுது தடந்தோட்
குடைந்ததடம்
பணையும்
பணைமென் முலைக்குடைந்த
இணைமா மருப்பும்
தருமுத்துன்
திருமுத் தொவ்வா
இகபரங்கள்
முழுதும் தருவாய் நிறைகனிவாய்
முத்தம் தருக
முத்தமே
முக்கட் சுடர்க்கு
விருந்திடுமும்
முலையாய் முத்தம்
தருகவே”
என்று பாடியுள்ளனர்.
நன்கு வளர்ந்த செஞ்சாலி
யானையை மறைக்கும் என்றதனால் நெல்வளம் கூறியதாயிற்று. இவ்வாறு நெல்லின் வளர்ச்சியினைச்
சிவஞான முனிவர்,
பங்கம் நிரந்த
வயல்கண் விளைந்த
பழத்துஎழு நெற்குலைபோய்ப்
பசும்புர வித்திரள்
பூட்டிய தேரில்
பரிதிக்
கடவுள்புடைப் பொங்கொளி
வெண்க வரித்தொகை
வீசுவ
போல ஒசிந்தசையும்
என்றனர். “களிறு
மறையப் போய செஞ்சாலி” என்று மதுரைக் காஞ்சியும் கூறுதல் காண்க.
பாலாற்றில் அடித்து
வரும் பொருள்களுள் மணியும் ஒன்று. மணி எனப் பொதுப்படக் கூறியதனால் முத்துக்களே அல்லாமல்,
ஏனைய மணிகளையும் கொள்க. ஆறு பல இடங்களையும் கடந்து வருதலின், அவ்வவ் இடங்களின் மணிகளை
அது வாரிக்கொண்டு வருகின்றது- முத்துக்கள் பிறக்கும் இடங்கள் பலவாக இருத்தலின், அவை அங்கங்குப்
பரந்து கிடக்க உழவர் அவற்றை வாரிக் குவிக்க நேர்ந்தது. குழந்தைகள் நூதனப் பொருள்களைக்
காணின், அவற்றை நாடி ஓடித் தொட்டு விளையாடுதல் மரபாதலின், சேக்கிழாராம்
|