ஒன
ஒன்றதாய் அனேக
சக்தி உடையதாய்
உடனாய் ஆதி
அன்றதாய் ஆன்மா
வின்தன் அறிவொடு
தொழிலை ஆர்த்து
நின்றபோத் திருத்து
வத்தை நிகழ்த்திச்செம்
பினில்க
ளிம்பேய்ந்து
என்றும்அஞ் ஞானம்
காட்டும் ஆணவம்
இயைந்து நின்றே
என்று எடுத்து இயம்புகிறது.
மேலும் இவ்வாணவ மலம்,
“பிறப்பு இறப்பு இல்லை
துக்கமோ, சுகமோ வீடோ திருவருளோ எதுவும் இல்லை எனச் சாதிப்பது. ஆன்மாவின் இச்சை ஞானம்
கிரியைகளைச் சற்றும் சீவியாதபடி செய்வது ; ஆன்மாவை மறைத்து நிற்பது.
தன்னைத் தவிர
யாரும் நிகரானவர் இல்லை என்றல் கோபம் கொள்ளுதல், விரோதம் பண்ணுதல், எதையும் ஆசைப்படுதல்,
உயிரைக் கொள்ளுதல், அகங்காரமாய் நடந்து கொள்ளுதல் ஆகிய குணங்களையும் கொண்டது. இந்த
ஆணவ மலமே கன்மமலம் மாயாமலம் ஆகிய மலங்கட்குக்காரணமாதலின், “ஏதுவாம் மலம்” என இதனை ஆசிரியர்
குறிப்பிட்டார். இம்மலம் விலகியது போலத் தோன்றும். ஆனால், விலகியது ஆகாது. அதனால்தான்
இம்மலம் உயிரோடு பொருந்தி இருப்பதற்குச் செம்பினுள் களிம்புபோல எனறும் உதாரணம் தந்து
பேசுவர். செம்பினைத் தேய்த்து ஒளியாக்கிய போது, களிம்பு முற்றிலும் நீங்கிவிட்டதாக எண்ணி
மகிழ்கின்றோம். ஆனால், சில நேரங்களுக்கெல்லாம் அக்களிம்பு வெளிப்படுதலைக் காணலாம்.
அதுபோலவே மலம் கழன்றதுபோலத் தோன்றினும் கழன்றதாகவே கூற முடியாது. இதனை நன்கு உணர்த்தவந்த
ஆசிரியர் மெய் கண்டார்,
நெல்லிற் குமியும்
நிகழ்செம்பின் னிற்களிம்பும்
சொல்லில் புதிதன்று
தொன்மையே-வல்லி
|