மலகன
மலகன்மம் அன்றுளவாம் வள்ளலால் பொன்வாள்
அலர்சோகம் செங்கமலத்
தாம்
என்றனர்.
மேலும் இதனைச்சிவப்பிரகாச
நூலாசிரியராகிய உமாபதி சிவாசாரியார்”
ஏகமாய்த் தம்கால
எல்லைகளின் மீளும்
எண்ணரிய சத்தியதாய்
இருள்ஒளிர இருண்ட
மோகமாய்ச் செம்பினுறு
களிம்பேய்ந்து நித்த
மூலமல மாய்அறிவு
முழுதினையும் மறைக்கும்
என்றும்,
நெல்லின்முளை தவிடுமிபோல்
அனாதி யாக
நிறுத்திடுவர்
இதுசைவம் நிகழ்த்தும் ஆறே.
என்றும் விளக்கிப்
போந்தார்.
ஆகவே, இத்தகைய
மலத்தின் சக்தி பெரிது. இதனை அறுக்க வேண்டின் சத்தினிபாத நிலையினைப் பெறுதல் வேண்டும்.
அதனையே ஈண்டு ஆசிரியர் திருவருள் பதிதல் என்றனர். திருவருள்தான் சத்தி என்பது. திருமூலர்
போன்றார் கருத்து அருள் சத்தி என்பது “அருளான சத்தி” என்றும் திருமந்திரம் கூறுதல் காண்க.
சத்தினிபாதம் என்பது இருவினை ஒப்புமல பரிபாகமாகும். அதாவது மும்மலம் நீ்ங்கிப் பக்குவ முடைய
ஆன்மாவிலே திருவருள் பதிகை என்பதாகும். ஆண்டவனது அருள் சத்தி நம் மாட்டுப் பதிதல்
ஆகும். ஆகவே, இறைவனது அருட்சத்தியாம் திருவருள் பேற்றைப் பெற்றால் மலம் நீங்கப் பெறுவோம்.
இம் மலத்தைப் போக்கும் முறை குறித்தே சிவஞானபோதம்,
செம்மலர் நோன்றாள்
சேரல் ஒட்டா
அம்மலம் கழீஇ அன்பரொடு
மரீஇ
மாலற நேயம் மலிந்தவர்
வேடமும்
ஆலயம் தானும் அரன்எனத்
தொழுமே
என்று உபதேசிக்கிறது.
|