பக்கம் எண் :

52

             காப்புப் பருவம்

    சார்வான திருமனமும் உழவராத்
        தனிப்படையும் தாமும் ஆகிப்
    பார்வாழத் திருவீதிப் பணிசெய்து
        பணிந்தேத்திப் பரவிச் செல்வார்

என்று குறித்திருத்தல் காண்க.

    இடையறாப் பேர்அன்பும் மழைவாரும்
        இணைவிழியும் உழவா ரத்திண்
    படையறாத் திருக்கரமும் சிவபெருமான்
        திருவடிக்கே பதித்த நெஞ்சும்
    நடையறாப் பெருந்துறவும் வாகீசப்
        பெருந்தகைதன் ஞானப் பாடல்
    தொடைஅறாச் செவ்வாயும் சிவவேடப்
        பொலிவழகும் துதித்து வாழ்வாம்

என்று நாவுக்கரசரை வடநூற்கடலும் தென்னூற் கடலும் நிலைகண்டுணர்ந்த
சிவஞான முனிவரும் உழவாரப்படையினை குறித்தல் காண்க.

    சுந்தரர்,  “ தேரூர் நெடுவீதி நன்மாடமலி நாவலர் கோன் “  எனத் தம்மைச் சுட்டிக் கொள்வதால் அவரை  “ நாவலர் பிரான் என்னலால்“  என்றது மிகப் பொருத்தமே ஆகும்.  சுந்தரருக்கு இப்பெயர் தாம் பிறந்த இடத்தின் காரணமாக அமைந்திருந்தாலும், அவரது நாவின் வன்மையினால் அமைந்த பெயர் என்று பொருள்கூறினும் அமைவுடைத்தாகும்.  அவரது நாவன்மையினைப் பல இடத்தும் அவர்தம் பாடல்களில் பரக்கக் காணலாம்.  இதற்கு ஓர் இடமாகக் கீழ்வரும் அவரது நாவன்மை காட்டும் பாடலைக் காண்க.  அது,

    பாதியோர் பெண்ணை வைத்தாய்
        படரும்சடைக் கங்கை வைத்தாய்
    மாதர் நல்லார் வருத்தமது
        நீயும் அறிதி அன்றே