மக
மக்களை உய்வு தேடி இனிதிருக்கச்
செய்வர் அரசர். இதுவே அறப்போர் முறையும் ஆகும். இதனை நந்தம் புறநாநூற்றில் “எம் அம்புகடிவிடுதும்
நும்அரண் சேர்மின்” என்று கூறும் ஆற்றால் அறியலாம். இம்முறை மேற்கொண்ட நாட்டில் கலகம்
கண்ட வணிகர்கள் அயல்நாட்டகம் புகுந்தனர். இதுவே முதல் நான்கு வரிகள் உணர்த்தும் கருத்து.
இப்பாடலில் அமைந்த
வரலாறு பின் வருவது : ஒரு காலத்தில் சேர நாட்டில் கலகம் ஏற்பட்டது. அதனால் சேர வணிகர்கள்,
வெவ்வேறு நாடுகளில் சென்றனர். அவ்வாறு சென்ற வணிகர்களுள் ஒரு பெண் தவறித் தொண்டை நாட்டு
வேளாளர்களைச் சரண் அடைந்தனள். அவளைத் தம் மகளாகவே ஏற்று வேளாளர்கள் வளர்த்து வந்தனர்.
பல நாட்களுக்குப்
பின் கலகம் நீங்க மீண்டும் தம் சேர நாட்டை அடைந்தனர். அங்ஙனம் அடைந்த அவர்கள் தம்மைவிட்டு
நீங்கிய பெண் தொண்டை நாட்டுக் காஞ்சி புரத்தில் வேளாளர்களிடம் வளர்வதை அறிந்து அவளை
அழைத்துப் போக வந்தனர். அதுபோது வேளாளர்கள் “நாங்கள் இப் பெண்ணை எங்கள் தங்கைபோல
வளர்த்தோம். அவளை நீங்கள் குறைவாக எண்ணாமல் உங்கள் மரபினன் ஒருவனுக்கு மணம் செய்து
கொடுப்பதானால் அனுப்புவோம்” என்றனர். வணிகர்கள் அவ்வாறே அவளை வணிகன் ஒருவனுக்குத் திருமணம்
செய்து கொடுக்க வேளாளர்கள் அப்பெண்ணிற்குச் சீதனம் முதலியவற்றைத் தந்தனர். அத்துடன் இன்றி
அவ்வணிகர்கள் அவ்வேளாளர்களை மைத்துன முறைமை கொண்டாடும்படியும் செய்தனர் என்பதாம்.
இதனைச் சேக்கிழார்
திருத்தொண்டர் புராணத்தில்,
ஆணையாம்என நீறுகண்டடிச்
சேரன் என்னும்
சேணுலவுசீர்ச் சேரனார்
திருமலை நாட்டு
வாணி லாவுபூண் வயவர்கண்
மைத்துனக் கேண்மை
பேண நீடிய முறையது
பெருதொண்டை நாடு
என்று குறிப்பிட்டுள்ளனர்.
தொண்டை மண்டலச் சதகமும் இவ்வரலாற்றை,
|